சிவா அஜீத் காம்பினேஷனுக்கு சிக்கல்! குறுக்கே நிற்கும் அட்வான்ஸ்!

0

‘மாரி’யாத்தா மழை பெய்ய தயாராக இருந்தாலும், குறுக்கே குடையை நீட்டினால் என்னாகும்? அப்படியாகியிருக்கிறது சிவாவின் நிலைமை. ‘விவேகம்’ படத்தின் நஷ்டக் கணக்கு இன்னும் சில வாரங்களில் கெட்ட சுனாமியாக உருமாறி இண்டஸ்ட்ரியில் இடி புயல்களை கிளப்புகிற சூழ்நிலை வந்த பின்பும், கொடுத்த வாக்கில் உறுதியாக நிற்கிறார் அஜீத்.

சிவாவுடன்தான் அடுத்த படம் என்கிற அளவுக்கு போய்விட்டதாம் இந்த உறுதி.

சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வேண்டிய சிவா, கடும் சோகத்தில் இருப்பதாக தகவல். ஏன்? ‘விவேகம் முடிந்த பின், அடுத்த படம் உங்களுக்குதான்’ என்று ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜாவிடம் கை நீட்டி அட்வான்ஸ் வாங்கியிருந்தாராம். விவேகம் ரிசல்ட் தப்பாக இருந்தாலும், சிவாவை வைத்து படம் இயக்குவதில் உறுதியாக இருக்கிறார் ஞானவேல்.

அதற்காக அஜீத்தை வைத்து படம் இயக்க அவர் தயாராக இருப்பாரா என்றால், அங்கும் சிக்கல். யார் அடுத்த படம் தயாரிக்கிறார்களோ, அவர்கள் விவேகம் நஷ்டத்தை சரி செய்துவிட்டுதான் அந்த புதிய படத்தை ரிலீஸ் செய்ய முடியும். எனவே அந்த இடியாப்ப சிக்கலுக்குள் தலையை விட மாட்டார் அனுபவசாலியான ஞானவேல்ராஜா.

இப்போது ஸ்டூடியோ க்ரீன் அல்லாது வேறு ஒருவருக்கு படம் இயக்கித்தர முடியாத நிர்பந்தத்திலிருக்கும் சிவா, என்ன செய்யப் போகிறாரோ?

யாரை யார் விட்டுத்தரப் போகிறார்களோ, அதை பொறுத்துதான் அடுத்தடுத்த ஸ்டெப்!

Leave A Reply

Your email address will not be published.