திருப்தி(?!) படுத்தியாச்சு! ஒருவழியாக முடிவுக்கு வருகிறது தியேட்டர் ஸ்டிரைக்!

0

கலைஞர் முதல்வராக இருந்த போதும் சரி. அம்மா முதல்வராக இருந்தபோதும் சரி. முதுகு தண்டில் ஸ்பிரிங் வைத்து வணங்கி வந்த சினிமாத்துறை, எடப்பாடி வந்த பின், அந்த போஸ்ட்டை காலியான டூத் பேஸ்ட்டின் ட்யூப் லெவலுக்கு கூட மதிக்காமல் போனதுதான் வினை! யானைக்கு ஒரு காலம் வந்தா, எறும்புக்கு ஒரு காலம் வரும் என்று காத்திருந்த எடப்பாடி தலைமையிலான அரசு, விழுந்து பிடுங்கிவிட்டது! சின்ன பல்லாக இருந்தாலும் செம ஷார்ப் என்பதை இப்போதுதான் உணர்ந்து கொண்டார்களாம் நிர்வாகிகள்.

தன்னை சந்திக்க வந்த சங்கத் தலைவர்களின் புலம்பல்களை காது கொடுத்துக் கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பதிலுக்கு கேட்ட கேள்விகளால் வாயடைத்துப் போய் நின்றார்களாம் இவர்கள். “ஏன் தியேட்டர்ல பத்து ரூபாய் பாப்கானை 150 ரூபாய்க்கு விற்கிறீங்க?” என்று ஆரம்பித்து, அவர் கேட்ட எந்த கேள்விக்கும் பட் பட்டென பதில் சொல்ல முடியாமல் தனது சப்தத்தை குறைத்துக் கொண்டதாம் சினிமாக்குழு. பல கட்ட பேச்சு வார்த்தைகளில் முடிவாக அவர்கள் தரப்பு ஒன்று கேட்க, இவர்கள் தரப்பு ஒன்றை சொல்ல, எப்படியோ ஆளும் தரப்பு திருப்தி(?) என்கிறார்கள்.

சில பல செலவுகளை எல்லா தியேட்டர்காரர்களும் பகிர்ந்துக்கணும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். ஆஸ்பிடலுக்குன்னு போயாச்சு. மருந்து செலவை மிச்சப் படுத்தவா முடியும்?

Leave A Reply

Your email address will not be published.