எதற்காக தளபதி பட்டம்? ஒரு கொடூர பிளாஷ்பேக்!

3

“சரி… போட்டா போட்டுக்கட்டும்யா. தளபதின்னு போட்டா நம்ம தளபதியா அவரு ஆகிடுவாரா?” -இப்படி தளபதி மு.க.ஸ்டாலினின் பாசப்படையினர் சமாதானப்பட்டுக் கொண்டாலும், ஒரு சம்பவத்தை நினைவு படுத்திக் கொண்டு கடுப்பாகிறார்களாம். அது என்ன? ஒரு கொடூரமான பிளாஷ்பேக். விஜய் நடித்த ஒரு படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் என்ன காரணத்தினாலோ அதை பல மாதங்கள் ரிலீஸ் செய்யாமலே வைத்திருந்தது.

விஜய்யை தவிர அவர் சம்பந்தப்பட்ட எல்லாரும் சன் பிக்சர்ஸ்சின் வாசலில் ஏறி சாத்வீகமான முறையில் நீதி கேட்டார்கள். அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. ஒரு நாள் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி அங்கிருந்த சன் பிக்சர்ஸ் இன்சார்ஜிடம், “தளபதி ரொம்ப பீல் பண்றாரு. படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடுங்களேன்” என்று தொலைபேசி மூலம் கேட்க, எதிர்முனை இப்படி கேட்டதாம். “தளபதியா… யாரு? எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே தளபதிதான். அவர்தான் மு.க.ஸ்டாலின். நீங்க தளபதின்னு யாரை சொல்றீங்க?” என்று கேட்க, விஜய் அப்பா படு வேதனைக்கு ஆளாகிவிட்டதாக அப்பவே இன்டஸ்ட்ரி முணுமுணுத்தது.

ஆனால் இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், எவ்வித முகச்சுளிப்புக்கும் இடம் தராமல் அதே அன்போடு திமுக தரப்பிடம் நட்பு வைத்திருக்கிறார் விஜய். இந்த தளபதி விவகாரம் எதார்த்தமாக நடந்ததா, அல்லது விஜய் அப்பாவின் விருப்பமா?

நடந்த பிளாஷ்பேக்கை ரிப்பீட் பண்ணி யோசித்தால், எதுவும் திட்டமிடாமல் நடக்கவில்லை என்பதுதான் பளிச்!

3 Comments
 1. Joseph Arputharaj says

  இவனுக்கு சொந்தமாக யோசிக்க வராத ??? முதலில் சூப்பர் ஸ்டார் பட்டம். அடுத்து இப்ப தளபதி பட்டம். யாருக்கோ பொறந்த குழந்தைக்கு இவன் initial வைக்கிறான்.
  சரியான இளிச்ச வாயன் தேவாங்கு மூஞ்சி

 2. கலைவாணன் says

  விஜய்க்கு அழிவுகாலம் வந்து விட்டது. இனி வரும் காலம் இளையர்கள் காலம்.
  இன்றைய குழந்தைகள், இளையர்கள் சிவகார்த்திகேயனை தான் விரும்புகிறார்கள்.

 3. கதிரவன் says

  எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவரகள் பதவிக்கு தான் கோடம்பாக்கத்தில் நிறைய பேரு நாக்கை தொங்க போட்டுகொண்டு அலைகிறார்கள். அது போல சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் எந்த பதவிக்கும் யாரு பதவிக்கும் ஆசை பட்டது கிடையாது. மக்கள் திலகம், நடிகர் திலகம் பட்டன்களை விட சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ரஜினியால் தான் மவுசு அதிகம். ஆதலால் தமிழர் தலைவர் ரஜினி அவர்களை யாரோடும் ஒப்பிட வேண்டாம்.
  வாழ்க கலியுக கடவுள் ரஜினி

Leave A Reply

Your email address will not be published.