கடைசியா சூர்யா நடிக்கும் படத்தின் கதை இதுதானா? அட விக்னேஷ் சிவனே…!

0

நயன்தாராவின் ‘நண்டுபிடி’ முயற்சிக்கு இணங்கி, விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார் சூர்யா. இந்தப்படத்திற்காக 60 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்திருக்கும் சூர்யா, அப்படியே இன்னொரு கண்டிஷன் போட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாராவைதான் நடிக்க வைக்க நினைத்திருக்கிறார் விக்னேஷ். ஆனால் “வேண்டாம்” என்கிறாராம் சூர்யா.

நயன்தாரா வேண்டாம் என்று சூர்யா மறுத்தாலும், விடாமல் நச்சரித்து வருகிறாராம் விக்னேஷ். படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இதற்கிடையில் இந்தப்படம் இவரது நேரடி கதை இல்லை என்றும், ‘ஸ்பெஷல் 26’ என்ற இந்திப்படத்தின் ரீமேக்தான் இது என்கிற பேச்சும் கிளம்பியிருக்கிறது. அக்ஷய் குமார் நடித்திருக்கும் இந்தப்படத்தை தமிழுக்காக கொஞ்சம் கொஞ்சம் மாற்றியிருக்கிறாராம் விக்னேஷ்சிவன்.

இதில் போலி இன்கம்டாக்ஸ் ஆபிசராக நடிக்கிறாராம் சூர்யா.

ஆமாம்… ஏன் நயன்தாராவை வேண்டாம் என்றார் சூர்யா? ஷுட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் தொழிலை மறந்து கொஞ்சிக் கொண்டிருந்தால் நிம்மதியாகவா இருக்க முடியும்? அதையெல்லாம் தவிர்த்துத் தொலைப்பதற்காகதான்!

To listen the audio click below :-

 

Leave A Reply

Your email address will not be published.