இதைதான் கொழுப்பு என்று வர்ணிக்கிறது இன்டஸ்ட்ரி!

0

இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் பிரமாண்டமான ஒரு தியேட்டர் வைத்திருக்கிறார் ஷிபுதமீம்! புலி பட தயாரிப்பாளர் என்றால் பொசுக்கென்று புரியும் உங்களுக்கு. கேரளாவில் வெளியாகும் விஜய் படங்களுக்கு மட்டுமல்ல, தமிழில் வெளியான ஏராளமான படங்களுக்கும் ஷிபு தமீம்தான் கேரள விநியோகஸ்தர். வெறும் விநியோகஸ்தராகவே எத்தனை காலத்திற்கு இருப்பது, வேறு மாதிரி ட்ரை பண்ணுவோம் என்று புலி படத் தயாரிப்பில் இறங்க, முதுகுவலி, மூட்டுவலி, மனவலி, மண்டைவலி வந்ததுதான் மிச்சம். இருந்தாலும் மனுஷன் டேக் இட் ஈஸி ஆசாமி. சார்… கேரளாவில் அந்தப்படம் ஏழு கோடி ரூபாய்க்கு மேல கலெக்ட் பண்ணுச்சு. தமிழ்நாட்ல கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் பெரிசா நஷ்டமில்ல. இப்பவும் விஜய் சார்ட்டயும், அவங்க அப்பா எஸ்.ஏ.சி சார்ட்டயும் என் நட்பு தொடருது. இனிமேலும் தொடரும் என்றார்.

இவரது அடுத்த படைப்புதான் விக்ரம் நயன்தாரா நடிக்கும் இருமுகன். இந்த படத்தை பொறுத்தவரைக்கும் கூட எனக்கு ஒரு டென்ஷனுமில்ல. ஏன்னா நானும் விக்ரமும் பல வருஷத்து நண்பர்கள். அடிக்கடி கேரளாவுக்கு வரும் அவர், எங்க வீட்ல அம்மா செய்யும் மீன் குழம்புக்கு அடிமை. கேரளாவில் நிறைய இடம் சுத்தியிருக்கோம். சினிமாவையும் தாண்டிய பிரண்ட்ஷிப் அது. இப்படியொரு கதையை டைரக்டர் எங்கிட்ட சொன்னதும், இதை மிஸ் பண்ணவே கூடாதுன்னு தோணுச்சு. உடனே தயாரிப்புல இறங்கிட்டேன். இதுவரைக்கும் தமிழ்ல இப்படியொரு கதை வந்ததில்லன்னு உறுதியா சொல்வேன் என்றார்.

ஐ பட ஹீரோவுக்காக ஐ அளவுக்கு செலவு பண்ண முடியுமா என்ன? ஆனாலும் இழுத்துப்போட்டுக் கொண்டு பணத்தை இறைக்கிறார் மனுஷன். இருமுகன் படத்திற்காக சென்னையில் எட்டு பிரமாண்டமான செட்டுகளை போட்டிருக்கிறார்களாம். படத்தில் டபுள் ஆக்ட் பண்ணியிருக்கிறார் விக்ரம். வழக்கம் போல கெட்டப்புக்காக நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் என்றார் ஷிபுதமீம்.

பின்குறிப்பு- இந்த படத்திற்காக ஒரு ‘அரை மொட்டை’ கெட்டப்பில் வருகிறார் விக்ரம். அடிக்கடி அதை ட்ரிம் பண்ண வேண்டுமாம். அதற்காக மூன்று நாட்களுக்கு ஒருமுறை மும்பைக்கு பிளைட்டில் போவாராம். முடி திருத்திவிட்டு அங்கேயே ஒரு நாள் ஸ்டார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் திரும்புவாராம். இப்படியொரு தகவலை கேள்விப்பட்டதும் ஒன்றே ஒன்றுதான் தோன்றியது. இந்த அரை மொட்டையை சீராக அடித்துவிட, சென்னையில் ஆளே இல்லையா விக்ரம்?

இதைதான் கொழுப்பு என்று வர்ணிக்கிறது இன்டஸ்ட்ரி!

Leave A Reply

Your email address will not be published.