வேலைக்காரன் படம் பார்த்த தோழர் நல்லக்கண்ணு!

0

தமிழகத்தின் பழுத்த அரசியல்வாதிகளில் முக்கியமானவர் ஐயா நல்லக்கண்ணு! எளிமையும் வலிமையும்தான் அவரது பலம். 80 வயதை தாண்டிய பின்பும் அரசியலில் ஆக்டிவாக இருக்கும் நல்லக்கண்ணு நல்ல சினிமாக்களை ஆதரிக்கிற விஷயத்தில் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. அப்படங்களை பார்க்க நேரம் ஒதுக்க தவறியதும் இல்லை.

அப்படிப்பட்ட நல்லக்கண்ணு, வேலைக்காரன் படத்தை நேரம் ஒதுக்கி பார்த்ததில் ஆச்சர்யமும் இல்லை. படத்தில் சொல்லப்படும் உணவு அரசியல். அதை முறியடிக்கிற தருணத்தில் காட்டப்படும் செங்கொடி இவையெல்லாம் அவரை நிச்சயம் கவர்ந்திருக்கும். இன்று அவருக்காக வேலைக்காரன் படம் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. முன்னதாக படத்தின் இயக்குனர் மோகன் ராஜா அவரை வரவேற்றார்.

படம் பற்றிய அவரது கருத்துக்கள் நிச்சயம் பாசிட்டிவாகதான் இருக்கும். சந்தேகமில்லை!

Leave A Reply

Your email address will not be published.