டிக்கெட் கொள்ளையை தட்டிக் கேட்கும் அஜீத் ரசிகர்கள்! ஆங்காங்கே அடிதடி!

0

ஏதோ அஜீத் படத்திற்குதான் இப்படி நடக்கிறதென்று இல்லை. இதற்கு முன் வந்த கபாலி படத்திற்கும் 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது டிக்கெட்!

ரஜினி, அஜீத், விஜய் படங்களுக்கு மட்டுமே வாய்க்கும் இந்த அதிசயம், ‘விவேகம்’ படத்திற்கும் நடந்து வருகிறது. ரசிகர் மன்ற ஷோ, தியேட்டர் ஷோ என்று நடத்தப்படும் அத்தனை ஷோக்களுக்கும் டிக்கெட் விலை 300 லிருந்து 500, 1000 என்று தியேட்டருக்கேற்ப உயர்ந்திருக்கிறது. ஆனால் டிக்கெட் என்ற ஒன்றை தர வேண்டும் அல்லவா? ஏதோ ஒரு துண்டு சீட்டையெல்லாம் கொடுத்து ஒப்பேற்றுகிறார்களாம். இதை தட்டிக் கேட்கும் ரசிகர்களுக்கும் தியேட்டர் நிர்வாகத்திற்கும்தான் இப்போது அடிதடி.

நேற்று தாம்பரம் ஏரியாவில் இயங்கிவரும் தியேட்டர் ஒன்றில், தலா 600 ரூபாய் டிக்கெட் தொகை வாங்கிய தியேட்டர் நிர்வாகம், “உங்க போன் நம்பர் சொல்லுங்க. நாங்க மெசேஜ் அனுப்புவோம். அதை காட்டுனாதான் உள்ள விடுவோம். மற்றபடி டிக்கெட்டெல்லாம் தர மாட்டோம்” என்று கூற, ஒரே ரகளை. சற்று ஓவராக பேசிய ரசிகர்களை, உருட்டுக் கட்டையால் தாக்க வந்தார்களாம் தியேட்டர்காரர்கள். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வரைக்கும் கம்ளைன்ட் பண்ணியிருக்கிறார்கள் ரசிகர்கள்.

கட்டிங்…கட்டிங்…! அதனால் தியேட்டர்காரர்களை மன்னிச்சு விட்டிங்…விட்டிங்!!

Leave A Reply

Your email address will not be published.