இந்த பெரியவரால ஒரே கொட்ச்சலு! ரஜினி ரசிகர்களை அலற விட்ட டிராபிக் ராமசாமி

2

அதென்னவோ தெரியவில்லை. டிராபிக் ராமசாமியால்தான் பல இடங்களில் டிராபிக் ஜாமே ஏற்படுகிறது. திமுக பேனர்கள் இருக்கிற இடங்களில் மட்டும் கண்டும் காணாமல் போய்விடும் பெரியவர் ராமசாமி, அதுவே அதிமுக பேனர்கள் அங்கு இருந்தால், ருத்ர தாண்டவே ஆடிவிடுவார். அவர் ஆடுகிற ஆட்டத்தை காணவே அங்கு பெரும் கூட்டம் கூடிவிடும். ஸ்மூத்தான வேகத்தில் போய் கொண்டிருக்கும் டிராபிக், அதற்கப்புறம்தான் ஜாம் ஆகும். போலீஸ் வந்து பிரச்சனையை தீர்ப்பதற்குள், ஒவ்வொரு வண்டியோட்டியும் ‘பன் பட்டர் ஜாம்’ ஆகியிருப்பான்.

சென்னையில் அன்றாடம் நடக்கும் இந்த அநியாயத்தில் நேற்று மட்டும் ஒரு வித்தியாசம். பெரியவரின் கண்களில் சிக்கியது ‘கபாலி’ பட பேனர்கள். திருவான்மியூர் பகுதியிலிருக்கும் ஒரு திரையரங்கத்தின் முன் ரஜினி ரசிகர்கள் பிரமாண்டமான ஒரு பேனர் வைத்திருந்தார்கள். அதை அகற்றியே தீர வேண்டும் என்று ஆக்ஷனில் இறங்கிவிட்டார் ராம்சாம்மீ!

“கபாலிடா…” என்று உள்ளே ரஜினி முழங்கிக் கொண்டிருக்க, “ராமசாமிடா…” என்று வெளியே முழங்கிக் கொண்டிருந்தார் தாத்தா. போலீஸ் வந்து பேச்சு வார்த்தை நடத்தியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த இந்த இந்தியன் தாத்தா, அவரே தன் கைகளால் பேனரை கிழிக்க ஆரம்பித்தார். இதை கவனித்துக் கொண்டிருந்த ரஜினி ரசிகர்கள் அவர் மீது பாய்ந்து அவரை நையப் புடைக்காத குறைதான். எப்படியோ போலீஸ் புண்ணியத்தில் தப்பித்தார் ராமசாமி.

இருந்தாலும் வேறு வழியில்லாமல் பேனர் அகற்றப்பட்டது. இது குறித்து தன் அதிருப்தியை வெளியிட்ட ரஜினி ரசிகர் ஒருவர், “சார்… இந்த பெரீவரால ஒர்றே கொட்ச்சல் சார். ஐயா… நாங்க ஒரு மூணு நாளு மட்டும் எங்க தலைவனுக்காக பேனர் வச்சுக்குறோம்னு எடுத்து சொன்னோம். கேட்கலீயே பெருசு. ராத்திரி முழுக்க ங்கொய்ய்ய் ங்கொய்யன்னு ஒரே போனு. பயங்கர கொட்ச்சல் குடுத்துருச்சு. தூங்கவே வுடுல. எப்ப பேனரை எடுக்குற எடுக்குறன்னு கேட்டு சல்லி பண்ணிட்டாரு? காலையில வர்றதுக்குள்ள இங்க வந்து நின்னுகினு ஒரே கலாட்டா… ஏன் சார்… எங்க தலைவனுக்காக மூணு நாளுதானே கேட்டோம். அதுல என்ன சார் வந்திருச்சு இந்த பெருசுக்கு? என்றார் ஆவேசம் அடங்காமல்.

பிரச்சனை பேனர்லயோ, ரஜினிகிட்டயோ இல்ல தோழா. இது ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர் ரிலீஸ் பண்ணின படம். அதான்… அதேதான்!

2 Comments
  1. கலையரசன் says

    கலியுக கடவுள் ரஜினி வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்கவே

    1. பிசாசு குட்டி says

      த்தூ!!!.. வெந்ததை திங்குறவன் – தின்றதை பேல்றவன் இவன் தான் மனுஷன்.. இதில் எவனடா கடவுள்.

Leave A Reply

Your email address will not be published.