ஜல்லிக் ‘ கட்டு ’ படப்பிடிப்பிலிருந்து விரட்டப்பட்ட த்ரிஷா!

0

இன்றைய தேதியில் ‘பீடா’ என்று வாயில் போட்டு மெல்லுகிற ஐட்டத்தை சொன்னால் கூட, பீட்டாவைதான் சொல்கிறானோ என்று திருவாளர் பொதுஜனம் முறைக்கிற சுச்சுவேஷனில் இருக்கிறது தமிழ்நாடு. இன்னமும் தன் பீட்டா கொள்கையை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை த்ரிஷா. ஏன்? பீட்டா அமைப்பின் தமிழக தூதுவரே இவர்தான். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விஷயத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் பீட்டா அமைப்புக்கு எதிராக நாடெங்கிலும் போராட்டம் வலுத்துள்ளது.

முதலில் ஜல்லிக்கட்டு விஷயத்தில் அப்படி இப்படி என்று இருந்த தமிழ் ஹீரோக்கள் அத்தனை பேரும், அடிச்சேன்டா சல்யூட் என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். ஜல்லிக்கட்டுன்னா என்ன என்று நக்கலடித்த ஆர்யாவே, “நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்” என்று பிளேட்டை திருப்பிப் போட்டுவிட்டார். கமல், சிம்பு போன்ற ஹீரோக்கள் துணிச்சலாக தங்கள் கருத்தை முன் வைத்து வரும் நிலையில், விஷால், தனுஷ் ஆகியோரும் பிற்பாடு இந்த கருத்துக்கு உடன் பட்டு வரத் துவங்கிவிட்டார்கள்.

ஆனாலும் த்ரிஷா வாயிலிருந்து நல்ல செய்தி வரவில்லை. இந்த சுச்சுவேஷனில்தான் இன்று காரைக்குடி அருகிலிருக்கும் சிவகங்கை பகுதியில் த்ரிஷா நடிக்கும் கர்ஜனை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு, த்ரிஷா நடிக்கும் படப்பிடிப்பை நடத்தவிட மாட்டோம் என்று ஆர்ப்பாட்டம் செய்ய… ஏரியாவே ரணகளம் ஆகிவிட்டது. நல்லவேளையாக த்ரிஷா கேரவேனுக்குள் வைத்து அடைக்கப்பட்டார்.

போலீஸ் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக சென்னை அனுப்பி வைக்கப்பட்டார் த்ரிஷா.

ஏம்மா… நீங்கள்லாம் வாயை வச்சுகிட்டு சும்மாயிருந்தா, உங்களை புக் பண்ற எங்களுக்கு தலைவலி வராதுல்ல? என்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்கள்.

த்ரிஷாவெல்லாம் நெறி கட்டணும்னே தேடிப்போய் அடி பட்டுக்குற கேரக்டர். வேறென்ன…? டிசைன் அப்படி!

Leave A Reply

Your email address will not be published.