விஜய் பற்றி அப்படியா சொல்ல வேண்டும் த்ரிஷா?

0

சினிமாவில் ‘நன்றி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பெரிய மரியாதை இருப்பதில்லை. ‘கிளிக்கு றெக்கை முளைச்சுட்து… பறந்து போயிட்து…’ என்றெல்லாம் அன்றாட அழுகுணி ஆட்டங்களுக்கு வழி வைக்கிற இதே சினிமாவில் த்ரிஷாவுக்கு மட்டும் ஸ்பெஷல் மனசு வந்துவிடுமா என்ன?

தமிழ்சினிமாவில் த்ரிஷாவின் சம்பளத்தில் மிக முக்கியமான லிஃப்ட்டாக இருந்திருக்கிறார் விஜய். அஜீத், விக்ரம், போன்ற இளம் ஹீரோக்களுடன் த்ரிஷா நடித்திருந்தாலும், விஜய்யின் ‘கில்லி’யில் அவருக்கு ஜோடியாக நடித்த பிறகுதான் தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்த முடிந்தது அவரால். அதற்கு முன்பு வரை லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த த்ரிஷா, அதற்கப்புறம்தான் கோடிக்கு தாவினார். இத்தனைக்கும் தனக்கு ஜோடியாக யார் வேண்டும், வேண்டாம் என்று விஜய் சொன்னால் டைரக்டர்கள் தலை வணங்கி கேட்கிற அளவுக்கு இருந்தது நிலைமை. இப்போதும் அந்த நிலைமையில் மாற்றமில்லை.

சரி… இப்போ என்ன அதற்கு? சொல்ல மாட்டோமா? அதை சொல்லதானே இத்தனை பீடிகை? சமீபத்தில் வட அமெரிக்கா போயிருந்த த்ரிஷா அங்கு சொன்ன ஒரு பதில்தான் இப்படி புலம்ப வைத்திருக்கிறது விஜய் தரப்பினரை. ‘உங்களுக்கு பிடித்த ஹீரோவை வரிசை படுத்துங்களேன்…?’ இதுதான் அங்குள்ள ரசிகர்கள் த்ரிஷாவிடம் கேட்டது. அதற்கு பதிலளித்த த்ரிஷா விஜய்யை ஐந்தாம் இடத்தில்தான் வைத்திருக்கிறார். முதலிடம் அஜீத்திற்கு. அதற்கப்புறம் சூர்யா, விக்ரம், கமல்… கடைசியாகதான் விஜய்.

இந்த பாராவின் முதல் வரியை மீண்டும் படிக்கவும்….

Leave A Reply

Your email address will not be published.