த்ரிஷா வாழ்வில் குறுக்கிட்ட பிந்து மாதவி! கதை இப்படி மாறிடுச்சா?

0

நிச்சயதார்த்தத்திற்கு செலவு பண்ணினா, கல்யாணமே தள்ளுபடி… என்கிற பெரிய ஆடித் தள்ளுபடி ஆஃபரை வழங்கி, த்ரிஷாவை சுதந்திர பறவை ஆக்கிய பிரபல தொழிலதிபர் வருண் மணியன் அதற்கப்புறம் த்ரிஷா விஷயத்தில் வாயையே திறக்கவில்லை. த்ரிஷா மட்டும் என்னவாம்? இது குறித்து கேள்வி கேட்ட மீடியாவிடம் அது என் சொந்த விஷயம் என்று கூறிவிட்டார். நாட்கள் உருள உருள என்ன தோன்றியதோ… நான் திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாதுன்னு சொன்னார். அதனால்தான் அவரை விட்டு விலகிட்டேன் என்றார்.

நடிகையா இருக்கணும். ஆனால் சினிமாவுல நடிக்காமலும் இருக்கணும் என்கிற வித்தியாச சிந்தனை கொண்ட வருண் மணியனுக்கு வசமாக சிக்கிவிட்டார் ஒருவர். த்ரிஷாவாவது பிசியான நடிகை. ஆனால் இவரோ வருண் மணியனின் கண்டிஷன்களுக்காக பெரிதாக மெனக்கடவே வேண்டாம். அல்ரெடி படங்களே இல்லாமல்தான் இருக்கிறார். எனவே மனமுவந்து தொழிலதிபருடன் சுற்ற ஆரம்பித்துவிட்டார்.

இந்த ஷர்ட் விற்பனைக்கல்ல… என்பதை தெரிவிப்பதற்காகவே சில பல போட்டோக்களை தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். அதை கண்ணார கண்டு காதார புகைவிடும் ரசிகர்கள் இப்போது அந்த பக்கத்தில் சென்று போட்டோவை தேட வேண்டாம். என்ன நினைத்தாரோ? போட்ட வேகத்தில் அதை நீக்கியும் விட்டார் பிந்து.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரான்னு யாருய்யா சொன்னது?

Leave A Reply

Your email address will not be published.