த்ரிஷா விவகாரம்! நடிகர் சங்கம் வழவழா கொழகொழா அறிக்கை!

1

சொம்புக்குள் தலையை விட்டது போலாகிவிட்டது த்ரிஷாவின் நிலைமை. ஒரு நடிகைக்கு கருத்தே இருக்கக் கூடாதா? என்றெல்லாம் அவருக்காக சிலர் ஆத்திரப்படுவதில் நியாயம் இருந்தாலும் எல்லா நியாயத்தையும் முட்டித் தள்ளிவிட்டது ஜல்லிக்கட்டு. த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் நுழைந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அவரை கேவலமான வார்த்தைகளால் திட்டி வருகிறார்கள். இந்தநிலையில் நடிகர் சங்கம், த்ரிஷாவின் பெயரை கூட குறிப்பிடாமல் விளக்ணெய் கையோடு வெண்டைக்காயை நறுக்கிய மாதிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் தனது கருத்தை பதிவுசெய்த சில நடிகர் நடிகையிடம், படப்பிடிப்பில் சிலர் எல்லை மீறி அவமரியாதை செய்தது வருந்ததக்கது. இந்த நேரத்தில் நம் கலைஞனும் பரமக்குடி மைந்தனுமான திரு.கமலஹாசன் அவர்கள் தனது வலைபக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. அதில் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்பவர்களை எல்லை மீறாமால் விமர்சிக்க வேண்டியதும், அதுவும் பெண்ணாக இருந்தால் கொச்சைப்படுத்தாமல் பதில் விமர்சனம் செய்வதும் கூட தமிழர் மரபு தான், என்று குறிப்பிட்டு இருக்கிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நமக்கு பின்னாடி நடிகர் சங்கம் நிற்கும் என்று த்ரிஷா மாதிரி நடிகைகள் நம்பினால், அந்த நம்பிக்கைக்கு ஒரு சொட்டு உத்தரவாதம் கூட இருக்காது போலிருக்கே?

1 Comment
  1. ROJA says

    VERA ENNA SOLLURATHAAM.

Leave A Reply

Your email address will not be published.