என்கேஜ்மென்ட்டை த்ரிஷா மறுப்பது ஏன்? பின்னணியில் ‘என்னை அறிந்தால்?’

0

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் ஆச்சா, இல்லையா? எப்போ கல்யாணம்? தேனிலவுக்கு எந்த நாட்டுக்கு ட்ரிப்? இப்படி ஓயாத கேள்விகளால் துளைபட்டு கிடக்கிறது தமிழகம். சிலவற்றில் தலைப்பு செய்தியாகவும், சிலவற்றில் நாலாம் பக்க செய்தியாகவும் இருந்தாலும், த்ரிஷா புராணம் இப்போதைக்கு தவிர்க்க முடியாத புராணம் ஆகிவிட்டது. இருந்தாலும் பிடிவாதமாக, ‘நிச்சயதார்த்தமா? நடக்கலையே…’ ‘கல்யாணமா? யாருக்கு…?’ என்ற ரேஞ்சில் பதில் சொல்லி வருகிறார் அவர்.

ஏன் இந்த மறைப்பு நாடகம்? விசாரித்தால் அதுவும் சரிதான் என்பது போலவே பதில் வருகிறது கோடம்பாக்கத்திலிருந்து. அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிக்க ரொம்பவே ஆசைப்பட்டாராம் த்ரிஷா. ஆனால் படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் தவிர மீதி அத்தனை பேருக்குமே அதில் விருப்பம் இல்லாமலிருந்ததாம். த்ரிஷா முகத்தை கவலையோடு பார்க்கிற சக்தி கவுதமுக்கு இல்லை. அதனால் அஜீத், ஏ.எம்.ரத்னம் ஆகியோரை சமாதானப்படுத்த தன்னால் ஆன முயற்சிகளை எடுத்த கவுதம், எப்படியோ அவர்களை கன்வின்ஸ் செய்தார். ஆனால் ஒரு மாத அவகாசத்தோடு.

அதன்படி த்ரிஷாவை தொடர்பு கொண்ட கவுதம், ‘எப்படியாவது நீங்க பழைய மாதிரி யூத்தாக வந்தாலொழிய இந்த படத்தில் நானே நினைச்சாலும் உங்களை உள்ளே கொண்டு வர முடியாது’ என்றாராம். அதற்கப்புறம் மின்னலாக செயல்பட்டார் த்ரிஷ். கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்று கடுமையாக போராடி கரெக்டாக கவுதம் சொன்ன கெடு தேதிக்குள் திரும்பி வந்தார். அதுவும் புத்தம் புது மின்னலாக! அற்புதமான ஒரு போட்டோ ஷுட்டிங்கும் எடுக்கப்பட்டது. அதற்கப்புறம்தான் உதட்டை பிதுக்கியவர்கள் எல்லாம், அதே உதடு குளிர அடடே… என்றார்கள்.

இந்த படத்தில் த்ரிஷாவுக்கு தனி பாடல் காட்சியே வைக்கப்பட்டிருக்கிறதாம். ஒரு மேடையில் அவர் ஆடுவதை போன்ற அந்த காட்சியில் ஏராளமான உடை மாற்றங்களுடன், கண் கவர் த்ரிஷாவை காண உத்தரவாதமே கொடுக்கிறார்கள் படக்குழுவினர். இந்த நேரத்தில்தான் த்ரிஷாவின் அந்த கல்யாண செய்தி. ‘ஏம்மா… படம் ரெடியாகி முடியுற கட்டத்துல இருக்கு. பொங்கலுக்கு படத்தை கொண்டு வர எல்லா திட்டங்களுடனும் ஓடிகிட்டு இருக்கோம். இந்த நேரத்தில் உனக்கு கல்யாணம்னு செய்தி வந்தால், அது படத்துக்கும் பின்னடைவுதானே?’ என்றார்களாம் ‘என்னை அறிந்தால்’ பட வட்டாரத்தில்.

அதனால்தான் அடக்கி வாசிக்கிறாராம் த்ரிஷா.

சினிமா கோழின்னா சொந்தமா கூவக் கூட முடியாது போலிருக்கு! என்னடா நாடு இது? என்னடா ரசனை இது?

Leave A Reply

Your email address will not be published.