விஜய்க்கு ஜோடி த்ரிஷாவா? நல்லா கிளப்புறாங்கப்பா பீதிகள…

0


‘ஃபேஸ்கட்டை பூங்கொத்து மாதிரியே வச்சுருக்க முடியும். அதுவும் கடந்த பதினெட்டு வருஷமாக’ என்று யாராவது இந்த உலகத்திற்கு காட்டினால், ‘இந்தா புடிங்க டீன் ஏஜ் திலகம் அவார்டை’ என்று கொடுப்பதுதானே முறை? அப்படி வாங்கி வாங்கி தன் வீடு கொள்ளாமல் வைத்திருக்கிறார் த்ரிஷா.

96 படத்தில் வந்த த்ரிஷாவின் மார்கண்டேயினி தோற்றத்தை மனதில் பிரேம் போட்டு வைத்துவிட்டான் ரசிகன். தனக்கு தமிழுலகம் கொடுத்த அந்த வெற்றியை இனி போற வர்ற ஊறுகாய்க்கெல்லாம் தாரை வார்க்க தயாராக இல்லாத த்ரிஷா, நடித்தால் முன்னணி ஹீரோக்களுடன்தான் என்ற கொள்கை முடிவை எடுத்துவிட்டார்.

அப்படியிருந்தும் த்ரிஷாவின் தோட்டத்தில் கத்தரிக்காய் விளையவில்லை. நல்ல செய்திக்காக காத்திருந்த த்ரிஷா, நாமே தேடிப் போய் தட்டினால்தான் உண்டு என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். விஜய்- லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தில் வாய்ப்பு கேட்டு தூது அனுப்பியிருக்கிறாராம். எதிர் சைட் எவ்வித கமிட்மென்ட் கொடுப்பதற்கு முன்பே, இந்த விஷயத்தை நைசாக மீடியாவில் கசிய விட்ட கொடுமையும் நடந்திருக்கிறது.

ஆனால் விஜய் சைடில் விசாரித்தால், சும்மா டிஸ்கஷனில் கூட த்ரிஷாவின் பேஸ்கட்டை பயன்படுத்தவில்லையாம் யாரும். அவர்களின் எண்ணம் முழுக்க அண்டை மாநில ஹீரோயின்கள் மீதுதான் இருப்பதாக கூறுகிறார்கள்.

வேணும்னா த்ரிஷாவை ஐதராபாத்தில் ரூம் எடுத்து தங்க சொல்றோம். தடபுடலா அழைச்சுட்டு வாங்க!

Leave A Reply

Your email address will not be published.