அட… த்ரிஷாவை இதுக்கெல்லாம் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்களா?

0

பெரிய ஹீரோக்கள் என்றால் எடுத்தவுடன் அவரை திரையில் காட்டிவிட மாட்டார்கள். முதலில் அவரது ஷு தெரியும். பிறகு அவரது சட்டை பட்டன் தெரியும். அப்புறம் அவரது மூக்கு நுனி. அவரை முழுசாக காட்டுவதற்குள் சூடாக போட்ட கேன்ட்டீன் வடையில், ஈ உட்கார்ந்து இளைப்பாறுகிற நேரம் ஆகிவிடும். பெரிய ஹீரோக்களின் இந்த அறிமுக காட்சிக்கு தமிழ் ரசிகர்கள் கிட்டதட்ட அடிமை ஆகிவிட்டார்கள். ஆனால் இதே பாணியை சில படங்களின் டீசர் போஸ்டர்களில் காட்டுவதுதான் இப்போது பெரும் கொடுமையாக இருக்கிறது.

‘கடல்’ படத்தை மணிரத்னம் எடுக்கும் போது அப்படத்தின் ஹீரோவை நாட்டு மக்களுக்கு காட்டிய காட்சியை யாரும் மறந்திருக்க முடியாது. முணுக்கென்பதற்குள் அவர் உருவம் வந்து போகிற மாதிரி ஒரு டீசரை வெளியிட்டிருந்தார். படம் வந்தபின்தான், அட… இந்த மூஞ்சிக்கா இவ்ளோ பில்டப்பு? என்று அலுத்துக் கொண்டான் ரசிகன். அவரால் அவ்வளவு பில்டப்புடன் காட்டப்பட்ட கவுதம் கார்த்திக், இன்று எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

ஒரு படத்திற்கு போஸ்டர் அடிப்பது, அதை ஏதாவது கழுதை ஒதுங்குகிற சுவரில் ஒட்டுவதென்பது ஒரு காலத்தில் சாதாரணம். இப்போது முதல் போஸ்டரை அர்னால்டு வெளியிட்டால், அடுத்த போஸ்டரை அமிதாப்பச்சன் வெளியிட்டால்தான் வௌம்பரம் என்று நினைக்கிறது சினிமாக்காரர்கள் மைண்டு. அப்படியொரு அட்ராசிடிக்குள் சிக்கிக் கொண்டது அருண்விஜய் நடித்த குற்றம் 23 படமும். (டைரக்டர் அறிவழகன் இப்படியெல்லாம் கெட்டுப் போனவரில்லையே, பின்ன எப்படி?)

முதல் போஸ்டர் வெளியாகி சுமார் இரண்டு வாரம் ஆன நிலையில், இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை நடிகை த்ரிஷா வெளியிட்டிருக்கிறார். இந்த களேபர விளம்பர டெக்னிக் நேற்று மாலை 4.30 க்கு நடந்திருக்கிறது. தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் த்ரிஷா.

கோழி முட்டைன்னா சுருக்குன்னு வெந்துரும். டைனோசர் முட்டைன்னா இப்படியெல்லாம் விதவிதமா வேக வைச்சாதான் உண்டு போலிருக்கு!

Leave A Reply

Your email address will not be published.