இரண்டே நாள் கால்ஷீட்! முப்பது கோடி சம்பளம்! அசைந்து கொடுக்காத ரஜினி!

2

கமல்ஹாசன் கூட தப்பி தவறி விளம்பரங்களில் வருவார். ரஜினிக்கு அந்த எண்ணமே இருந்ததில்லை. ஏராளமான நிறுவனங்கள் அவருக்கு தூண்டில் போட்ட போதும் துளி கூட அசைந்து கொடுத்ததில்லை அவர். அவரையே லேசாக அசைத்துப் பார்த்தாராம் அந்த துணிக்கடை அதிபர். பில்டப் எதற்கு? அந்த துணிக்கடை அதிபர், வருங்கால வார்னிங் ஸ்டார் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன்தான்.

விளம்பரங்களில் வந்து அகில உலகத்தையே மிரட்டிக் கொண்டிருக்கும் அவர், எண்ணம், மூச்சு எல்லா நிலையிலும் வியாபாரத்தை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் அருமையான முதலாளி அல்லவா? ரஜினியை சந்தித்த போதும் அதே எண்ணம் தலை தூக்கியிருக்கிறது.

சமீபத்தில் தவிர்க்க முடியாமல் இருவரும் சந்தித்துக் கொண்ட இடம் மலேசியா ஸ்டார் நைட். சென்னை திரும்பிய பின்பும் தன் நட்பை தொடர்ந்தார் அதிபர். அப்போது அவர் ரஜினியிடம் கேட்டதாக ஒரு தகவல். ‘இரண்டு நாள் கால்ஷீட் கொடுங்க. முப்பது கோடி சம்பளம். எங்க நிறுவனத்திற்காக ஒரு விளம்பர படத்தில் நடிக்க முடியுமா?’

மூன்று நாள் கால்ஷீட்டுக்கு பத்து கோடி சம்பளம் வாங்கிய கமலை விட, இது பல மடங்கு அதிகம்தான். ஆனால் தன் வழக்கமான ட்ரெட் மார்க் சிரிப்பையே பதிலாக தந்தாராம் சூப்பர் ஸ்டார்.

2 Comments
  1. சிபி says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு நாகரிக அரசியலை கொண்டு வர முயற்சி செய்கிறார். . தமிழக மக்கள் இத்தருணத்தில் அவர்ளுக்கு தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும். தமிழகம் வளம் பெற தமிழக மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தமிழக முதல்வர் ஆனால் தான் முடியும்.

  2. Naren says

    is there is no good qualified tamilian to rule your state? why this drunk wasted , who never raised his voice for people issues, so selfish guy.

Leave A Reply

Your email address will not be published.