விஷால் முகம் கொடூரமா இருக்காம்! பேஷியல் செய்யச் சொல்கிறார் தாணு!

1

லெமனுக்கே புளிப்பா? நடிகனுக்கே பேஷியலா? என்று நேற்று அதிர்ந்துதான் போனது நிருபர் கூட்டம். காரணம், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவின் பிரஸ்மீட் ஸ்பீச் அப்படி! ஒரு வருடமும் இல்லாத திருவருடமாக அமைந்துவிட்டது இந்த தேர்தல். திடீர் போட்டியாளர்களாக விஷால், மிஷ்கின் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் களம் இறங்கிவிட்டதால், கடும் கோபத்திலிருக்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய தூண்கள் பலரும். முக்கியமாக தயாரிப்பாளர் தாணு.

விஷால் அணிக்கு எதிராக தனித்தனியாக போட்டியிட்டவர்களை அழைத்து ஒருங்கிணைத்த பின், அந்த அறிவிப்பை பிரஸ்சுக்கு தெரிவிக்க வந்திருந்தார். வந்த இடத்தில்தான் வசை மாரிப் பொழிந்தார்கள் விஷால் மீதும் அவருக்கு ஆதரவானவர்கள் மீதும்.

“தம்பி விஷாலு. உனக்கு வயசு நாற்பதுக்கு மேல ஆகிட்டு வருது. பேசாம நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுனமா, கல்யாணம் பண்ணினமான்னு இல்லாம உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? வர வர உன் முகத்தை பார்க்கவே முடியல. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். சார்மிங்கா இருக்கணும்ப்பா. முதல்ல பேஷியல் பண்ணுப்பா…” என்றார் தாணு பலத்த ஆரவாரத்திற்கிடையில்.

நிருபர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு ஆதாரத்தோடு பதிலளித்தவர், விஷாலை பற்றிய பல எவிடன்ஸ்கள் வைத்திருப்பதாகவும் அதை 29 ந் தேதி வெளியிடப் போவதாகவும் கூறினார்.

அவர் கூறிய இன்னொரு தகவல்தான் பல யூகங்களை கிளப்பிவிட்டது. கவுதம் மேனனையும் பிரகாஷ்ராஜையும் இந்த தேர்தலில் எங்களுக்கு எதிராக நிற்க வைத்ததே அந்த பிரபல நடிகர்தான் என்றார் ஆவேசமாக. (கமல்ஹாசனைதான் சொல்றாரோ?)

“ஒரு நடிகர் இந்த சங்கத்தில் பொறுப்புக்கு வரக்கூடாதுன்னு ஏன் சொல்றோம்னா, இங்கு ஒரு படம் வெளியாகும் போது பிரச்சனை வருதுன்னு வைங்க. நடுவில் உட்கார்ந்து பேச வேண்டிய விஷால், அவுட்டோர் ஷுட்டிங்கில் இருந்தால் என்ன செய்வது? இந்த குழப்பம் வேண்டாம். இதற்கென்றே அர்ப்பணிப்பவர்கள் வரட்டும் என்பதால்தான் சொல்கிறோம்” என்றார் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா.

பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

1 Comment
 1. Rajii says

  தாணுவின் நேற்று பேச்சு தரம் தாழ்த்த பேச்சு.
  தயாரிப்பாளர் சங்க தேர்தலா தனிப்பட்ட போட்டியா.
  ஒரு நல்ல அணி அமைத்து வெற்றிபெறுவதை விட்டிட்டு தாணுவோடு ஏன் கூட்டணி சென்றார் சுரேஷ் காமாட்சி ?
  என்ன ஆதாரம் எத்தனை படம் தோல்வி நட்டம் …
  தாணுவே ஒரு பெரிய fraud இதில ம்ம் .

Leave A Reply

Your email address will not be published.