ஏறாத போலீஸ் ஸ்டேஷன் இல்ல, கை குலுக்காத கிரிமினல்ஸ் இல்லே’

சூதுகவ்வும், நேரம், ஜிகிர்தண்டா படங்களை பார்த்துவிட்டு, ‘யார்றா அந்தாளு?’ என்று ஆச்சர்யப்பட்டவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்க வந்திருக்கிறார் சிம்ஹா. யெஸ்… அதற்குள் ஹீரோவாக பிரமோஷன் ஆகிவிட்டார் இந்த சிம்ஹா. (ஸ்…ஹா. வேறொன்றுமில்லை, ரொம்ப காலமாக ஹீரோ அந்தஸ்துக்காக அல்லாடி வருகிறவர்களின் தும்மல் அது) பொதுவாகவே இந்த சிம்ஹா நடிக்கும் படங்கள் அனைத்துமே பிளாக் காமெடி டைப்பான படங்களாக இருந்திருக்கிறது. இதில் இவர் ஹீரோவாக அறிமுகமாகும் உறுமீன் என்ன மாதிரியான கதை?

ஆக்ஷன் த்ரில்லராம். ‘இந்த கதைக்காக ஏறாத போலீஸ் ஸ்டேஷன் இல்ல, கை குலுக்காத கிரிமினல்ஸ் இல்லே’ன்னு சிம்ஹா பிரஸ்மீட்டில் முழங்கினால் ஆச்சர்யப்பட வேண்டாம். ஏனென்றால் 1990 லிருந்து சுமார் 25 ஆண்டுகளில் நடந்த பொருளாதார குற்றங்களையும், அதன் பின்னணிகளையும் அலசி ஆராயும் படமாம் இது. சக்திவேல் பெருமாள்சாமி இயக்கும் இப்படத்தில் சிம்ஹாவுக்கு ஜோடியாக புதுமுகம் ஆராதனா நடிக்கிறார். அப்படியே ஒரு கெஸ்ட் ரோலில் பெரிய ஹீரோ ஒருவரை நடிக்க வைக்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

அச்சு என்பவர்தான் இந்த படத்தின் இசையமைப்பாளர். தெலுங்கில் சில படங்களும் தமிழில் சில படங்களும் இவரது இசையில் வெளிவந்திருக்கின்றன. அச்சு அசலாக காப்பியடிக்கும் இசையமைப்பாளர்களுக்கு மத்தியில், அச்சு என்ன செய்யப் போகிறார்? பிச்சு உதறப் போகிறார் என்பதை போல ஒரு செய்தி. புறநாறுற்றிலிருந்து 13 வரிகளை பயன்படுத்தி ஒரு பாடல் உருவாக்கியிருக்கிறாராம்.

வரும்போதே வெரைட்டியா? பொழச்சிப்பாரு…!

1 Comment
  1. வாசகன் says

    ஆராதனா-வா?

    அந்தப் புள்ள விஜய் டீவி ஜோடி நம்பர்-1 ஆடியபோது அதோட பேரு ஹரிதா தானே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத்தின் மேனேஜரானார் ஆர்யா!

தலைப்பை படித்துவிட்டு தலைகுழம்பி போகிறவர்கள், பின்வரும் தொடர்ச்சியை படித்துவிட்டு கூல் ஆகிவிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். பொதுவாக ஒரு முன்னணி ஹீரோவை அப்ரோச் செய்து கதை...

Close