உதயநிதி சார்… உஷாரா இருங்க!

0

உதயநிதியை உப்பு மூட்டை தூக்கிக் கொண்டிருந்த சந்தானம், ஒருவழியாக அவரை இறக்கிவிட்ட பின்புதான் அவர் முழு மார்க் வாங்கும் ஹீரோவானார். அதற்கப்புறம் வந்த ‘மனிதன்’ படம், ‘நண்பேண்டா…’ இமேஜிலிருந்து ‘நடிகேண்டா…’ இமேஜூக்கு உதயநிதியை உயர்த்தியது. பிறகு அவரது நடிப்பு பயணத்தில் திடுக்கிடும் திருப்பங்கள். “சொந்தமா பணம் போட்டு சொந்தமா எடுத்துக்கிறார்ப்பா…” என்கிற அவச்சொல்லிலிருந்து அவரை கரையேற்றுவதற்காக கை கொடுத்தது பிரபல வெளிநாட்டு நிறுவனமான லைக்கா.

தூங்காநகரம், சிகரம் தொடு படங்களை படங்களை இயக்கிய கவுரவ் சொன்ன கதையில் சரண்டர் ஆன லைக்காவும், உதயநிதியும் ஒரு நல்ல நாளில் பூஜை போட்டு படப்பிடிப்புக்கும் கிளம்பிவிட்டார்கள். இதுவரைக்கும் ஓ.கே. இதற்கப்புறம் சொல்லப்படும் கதைகள் உதயநிதியின் காதுக்கு போச்சோ இல்லையோ? கொண்டு செல்ல வேண்டியது நம்ம கடமையாச்சே? சிலபல சினிமா கம்பெனிகளில் காதை தடவி கழுத்தை சுற்றி பேசப்படும் விஷயம் இதுதான்.

இந்தப்படத்தின் கதை, ஒரு அப்பாவி உதவி இயக்குனருடையது. அடிப்படையில் மாற்றுத் திறனாளியாம் இவ்ர. தன்னிடம் பணியாற்றிய அவரை கழற்றிவிட்ட டைரக்டர், அந்தக்கதையை மட்டும் வாகாக சுட்டுக் கொண்டு கிளம்பிவிட்டாராம். இந்த கதையையெல்லாம் அறியாத உதயநிதி, கவரவ் கதைக்கு டிக் அடித்துவிட்டு ஷுட்டிங்குக்கே கிளம்பிவிட்டார்.

இத்தனைக்கும் அந்த உதவி இயக்குனர் கவுரவிடமிருந்து பிரிந்து வந்தபின், கருணாசிடம் அந்தக் கதையை சொல்லி அவர் உதவியுடன் இந்தப் படத்தை இயக்கவும் கிளம்பியிருந்தாராம். அதற்குள்தான் கருணாஸ் எம்.எல்.ஏ ஆகிவிட்டாரே? இப்போது தன் கதை திருடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததும், தகுந்த ஆதாரங்களோடு அதை நிரூபிக்க கிளம்பியிருக்கிறாராம்.

மழை வருவதற்குள் குடையை விரித்துவிடுங்கள் உதயநிதி. ஐயோ பாவம்… அப்பாவி இயக்குனர் பிழைத்துவிட்டு போகட்டும்!

To listen Audio Click below:-

Leave A Reply

Your email address will not be published.