மகனுக்கு த்ருஷ்டி சுற்றிப் போட்ட உதயநிதி அம்மா!

0

மனிதன் பட வசூல் அவரது முந்தைய பட கலெக்ஷன்களை விட படு டாப்பில் இருப்பதாக கூறுகிறது வியாபார வட்டாரம். இதற்கிடையில் படத்தை பார்க்க நேரம் ஒதுக்கி வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். “ தேர்தல் நேரம். படம் பார்க்க எதுக்கப்பா அவ்வளவு தூரம்?” என்றெல்லாம் கூறாமல், சட்டென நேரம் ஒதுக்கி வந்தாராம். படம் பார்த்துவிட்டு உதயநிதியை கட்டி அணைத்துக் கொண்டவர், “தேர்தல் நேரத்தில் எனக்கு பெருமை தேடி தந்திட்டே’ என்று வாழ்த்தியும் இருக்கிறார்.

அதற்கப்புறம் வீட்டுக்குப் போன உதயநிதிக்கு இன்ப அதிர்ச்சி. அம்மா துர்கா ஸ்டாலின் வீட்டு வாசலில் பூசணிக்காயுடன் நின்றிருக்கிறார். மகனுக்கு திருஷ்டி சுற்றி போட்டுவிட்டுதான் வீட்டுக்கே அழைத்திருக்கிறார்.

ஊர் பாராட்டுவது ஒருபுறம் இருந்தாலும், உடனிருப்பவர்களும், குடும்ப உறுப்பினர்களும் நெஞ்சார பாராட்டியதால், இது போல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படங்களிலேயே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம் உதயநிதியும்.

அப்ப விஎஸ்ஓபி கும்பலை கனவிலும் கிட்டே சேர்க்க மாட்டீங்களா?

Leave A Reply

Your email address will not be published.