நான் டீ கடையில் பார்த்த அதே இயக்குனர்! கஞ்சா கருப்பு பிளாஷ்பேக்!

எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் வாசன் ஷாஜி,டத்தோ முனியாண்டி இணைந்து தயாரிக்கும் படம் “வாண்டு”, புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் தெறி வில்லன் சாய் தீனா, தடயறத்தாக்க வில்லன் மகா காந்தி, மெட்ராஸ் புகழ் ரமா, ஆகியோர் நடிக்க வாசன் ஷாஜி இயக்கத்தில், ரமேஷ் & V.மகேந்திரன் ஒளிப்பதிவில், A .R.நேசன் இசையில், பிரியன் படத்தொகுப்பில், கவிஞர் மோகன்ராஜன் வரிகளில், உருவாகி இருக்கு படம் வாண்டு இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் பிரிவியூ திரையரங்கில் மிக பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர், இயக்குனருமான சமுத்திரகனி மற்றும் காமெடி நடிகர், தயாரிப்பாளருமான கஞ்சா கருப்பு கலந்து கொண்டனர்.

இதில் சமுத்திரகனி பேசுகையில் சினிமா பின்னணி இல்லாமல் ஒரு படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஏன் என்றால் நானும் ஆரம்ப காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன், ஒரு இடம் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான் இல்லை இல்லை ரொம்ப கடினம் தான் இந்த படத்தின் இயக்குனர் வாசன் ஷாஜியை ஆரம்ப காலத்தில் இருந்தே தெரியும் ரொம்ப நல்ல மனிதர் இவர் படம் வெற்றிபேறனும் என்று கேட்டுக்கொண்டார். மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களது கடின உழைப்பால் இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். வடசென்னை மக்கள் தான் இம்மண்ணின் மைந்தர்கள். இப்படத்தின் டிரெய்லர் பார்க்கும்போது கோலிசோடா படம்தான் நினைவுக்கு வருகிறது என்று கூறினார்.

கஞ்சா கருப்பு பேசுகையில் நான் ஆரம்ப காலத்தில் ஒரு ஒரு ஆபீஸ் செல்லும் போது எந்த ஆபீஸ் பாத்தாலும் ஆபீஸ் பக்கத்திலோ அல்லது டீ கடையிலோ இயக்குனர் வாசன் ஷாஜி நின்று கொன்று இருப்பர் நான் அவரிடம் பேசுகையில் சும்மா வந்தன் தலைவரே என்று கூறுவார் அன்று முதல் இன்று வரை அவர் ஓடி கொண்டுதான் இருக்கிறார் நல்ல நண்பரும் கூட கடந்த 10 வருடமா எனக்கு அவரை தெரியும் கடின உழைப்பு என்றும் வீன் போகாது உங்கள் படம் வெற்றி பெற என்னோடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Velaikkaran Set Making Video

https://www.youtube.com/watch?time_continue=5&v=Vuc8glVE4k8

Close