வடிவேலுவை வைத்து இனி எக்காலத்திலும் படம் இயக்க மாட்டேன்! சூளுரைக்கிறார் சுந்தர்சி

0

‘பேக்கரிய நீ வச்சுக்கோ, ஒங்கக்காள நான் வச்சுக்கிறேன்… ’ காமெடியை இன்னும் ஐம்பது வருஷத்துக்கும் கூட யாராலும் மறக்க முடியாது. வின்னர் வடிவேலுவும், அவரது கட்டப்புள்ள கெட்டப்பும், பாடி லாங்குவேஜும், டயலாக் டெலிவரியும் கூட தமிழ்சினிமா காமெடியில் இன்னும் பல வருடங்களுக்கு உச்ச ஸ்தாயில்தான் இருக்கும். இப்படியெல்லாம் வடிவேலுவுக்கு அழியாத புகழை தேடிக் கொடுத்த இயக்குனர் சுந்தர்சி அந்த கட்டபுள்ளயின் மீது கடும் கோபத்திலிருக்கிறார் என்பது இன்று தெரியவந்தது. அரண்மனை படம் தொடர்பாக பிரஸ்சை மீட் பண்ணிய அவர், இப்ப மட்டுமமில்ல, இனிமே எப்பவும் வடிவேலுவை வச்சு படம் பண்ணுறதா ஐடியவே இல்ல என்றார் ஒரே போடாக.

அதற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக தெரிவிக்க மறுத்துவிட்டாலும், சந்தானத்தை புகழ்வதில் கொஞ்சம் கூட குறை வைக்கவேயில்லை. நான் சந்தானத்தோட இரண்டு மூன்று படங்களில்தான் சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கேன். அவ்வளவு கம்ஃபர்ட்டான நடிகர் அவர். ஒரு முறை கூட அவர் எங்கிட்ட சம்பளம்னு வாய் திறந்து கேட்டதில்ல. உங்களுக்கு எத்தனை நாள் வேணும். கேளுங்க. தர்றேன்னுதான் சொல்லியிருக்கார். நானாக பார்த்து கணக்கு போட்டு கொடுக்கிற பணத்தை மனப்பூர்வமாக வாங்கிட்டு போயிருக்கார்.

இப்போது நான் இயக்கும் ‘அரண்மனை‘யில் கூட சந்தானத்திற்கு முக்கிய ரோல் கொடுத்திருக்கேன். அவர் ஹீரோவாகதான் நடிப்பேன்னு சொல்வதா நீங்க (பிரஸ்) சொல்றீங்க. ஆனால் எங்கிட்ட அப்படியெல்லாம் சொல்வாருன்னு தோணல என்றார். ஒரு பிரமாண்ட அரண்மனைக்கு சமையல்காரராக வரும் சந்தானம் அங்குள்ள பேயிடம் சிக்கிக் கொண்டு அவஸ்தை படுவாராம். சிரிச்சு சிரிச்சு வயிறு முட்ட போவதுக்கு நான் உத்தரவாதம் என்றார் சுந்தர்சி.

கலகலப்பு செகன்ட் பார்ட் பண்ணுகிற எண்ணம் அவருக்கு இருப்பதாக வந்த தகவலையும் அப்படியே போகிற போக்கில் ‘இல்லையே… ?’ என்று மறுத்துவிட்டு கிளம்பினார் சுந்தர்சி. அப்படின்னா அஞ்சலிய பார்க்கணும்னா முதல் பார்ட் டி.வி.டி தான் ஒரே வழி போலிருக்கு. ஹ்ம்ம்ம்ம்…

Leave A Reply

Your email address will not be published.