விட்ட இடத்தை பிடிக்க வருகிறார் வடிவேலு! போற ரூட் புது ரூட்!

2

வடிவேலுவின் காமெடிதான் இப்பவும் சேனல்களுக்கு பசி போக்கும் புண்ணாக்கு, மற்றும் புல் மீல்ஸ்! விதவிதமாக, ரக ரகமாக அவர் காட்டிய கோணல் மாணல் சேஷ்ட்டைகளை அதற்கப்புறம் வந்த எந்த காமெடியன்களும் பீட் பண்ண முடியாமல் பீட் ரூட் ஆகிக் கிடக்கிறார்கள். சந்தானம், சூரி என்று தப்பி பிழைத்த சிலர், சமயங்களில் ஒரே மாவை அரைப்பதால் மக்களின் சாபத்திற்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் தன் ஈகோவை அள்ளி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு இளம் ஹீரோக்களோடு ஜெல் ஆகிவிட்டார் வடிவேலு. அதற்கு உறுதுணையாக இருந்தது சமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தல்தான். விஷால் அணியினர் மதுரையில் ஓட்டுக் கேட்க போய் இறங்கினார்கள் அல்லவா? அங்கேயே இந்த டீமோடு டீம் ஆகிவிட்டாராம் வடிவேலு. அவர் சகஜமாக பேசி சிரித்து கலாட்டா செய்ததையெல்லாம் எண்ணி எண்ணி இன்புறுகிறார்கள் விஷால், விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் விஷால் அணியில் இருக்கும் இளம் ஹீரோக்கள். “அண்ணே… நீங்க மறுபடியும் எங்க கூட சேர்ந்து நடிக்கணும்” என்று இவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக கோரிக்கை வைக்க, “நானென்ன வெளிநாட்டுக்கு போய் வெள்ளாடாய்யா மேய்ச்சுகிட்டு கெடக்கிறேன். இந்தா இருக்கிற சாலிகிராமத்துல இருக்கேன். வா… வந்து நடின்னா நடிச்சுட்டு போறேன்” என்று சுலபத்தில் இறங்கி வந்தாராம் வடிவேலு.

முதல் கட்டமாக விஷாலே தன் படத்தில் வடிவேலுவை இறக்கி விடுவார் போல தெரிகிறது.

வரட்டும்… வரட்டும்… கால்ல மிதிச்ச சாணி, தானே கரைஞ்சு காணாம போற நேரம் வந்தாச்சு வடிவேலுவுக்கு!

2 Comments
  1. seelan says

    sariya soneenka.
    கால்ல மிதிச்ச சாணி, தானே கரைஞ்சு காணாம போற நேரம் வந்தாச்சு வடிவேலுவுக்கு!

  2. […] விட்ட இடத்தை பிடிக்க வருகிறார் வடிவே… […]

Leave A Reply

Your email address will not be published.