வடிவேலு டார்ச்சர்! நிறுத்தப்பட்ட புலிகேசி! ஷங்கர் படத்துக்கே இந்த நிலையா? சேச்சே…

0

பல நேரங்களில் நல்ல நல்ல கதைகள், மெல்ல மெல்ல உருமாறி ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும். அந்த நல்ல வேலையை மெனக்கெட்டு செய்வார்கள் அப்படத்தில் நடிக்கும் ஹீரோக்கள். பல நல்ல கதைகள், இப்படி நைந்து நாசமாகி போன சம்பவங்கள் கோடம்பாக்கத்தில் அநேகம் உண்டு.

அப்படியொரு அநியாய வேலையை அண்மைக்காலமாக பார்த்து வருகிறாராம் வடிவேலு. ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும்போது வடிவேலுவுக்கு துளி மார்க்கெட் இல்லை. தமிழ்சினிமாவே அவரை புறம் தள்ளி, புழக்கடை பக்கமாக ஒதுக்கிவிட்ட நேரம். இருந்தாலும் தன் கெத்தை அவர் விட்டுக் கொடுக்கவே இல்லை.

ஒரு பெரிய சம்பளத்தை கேட்டவர், நல்ல தொகை ஒன்றை அட்வான்சாகவும் பெற்றுக் கொண்டார். அதற்கப்புறம் கொழுத்த பண பின்புலம் உள்ள லைக்காவும் ஷங்கருடன் இணைந்து கொண்டது. விடுவாரா வடிவேலு? எக்ஸ்ட்ரா சில கோடிகள் வேண்டும். இல்லேன்னா வேற ஆளைப்பாருங்க என்று கூறிவிட, வேறு வழியில்லாமல் தண்டம் அழ ஒப்புக் கொண்டார் ஷங்கர். அதான் முடிஞ்சாச்சே… இப்ப என்னவாம்? படம் துவங்கி ஒரு வாரம் ஷுட்டிங் போன நிலையில், படமே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்.

ஏன்? வடிவேலுவின் டார்ச்சர்தான். கதையிலும் காட்சியமைப்பிலும் ஓராயிரம் நொட்டை நொ ள்ளை சொல்லி வருகிறாராம். சில நேரங்களில் தானே கேமிராவை கைப்பற்றி ஆங்கிள் வைப்பதும், வசனங்களில் கரெக்ஷன் சொல்லுவதுமாக கொடுத்த குடைச்சலில் குமுறி குமுறி திணறிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன்.

இப்படி திக்கித் திணறி போய் கொண்டிருந்த படப்பிடிப்பு இப்போதும் முற்றிலும் நகரவில்லை. ஏன்? வடிவேலு கேட்ட ஏதோவொன்றை தர முடியாமல் தவிக்கிறது யூனிட். அது வரும்வரைக்கும் நான் அங்கு வரப்போவதில்லை என்று ஸ்டாப் ஆகிக் கிடக்கிறார் வடிவேலு.

அப்படியே ஓடிட்டீங்கன்னா… தமிழ்சினிமா பிழைக்கும். ஓடிருங்க வைகைப்புயல்!

Leave A Reply

Your email address will not be published.