லிங்கா சிங்காரவேலன் ஆனார் வைரமுத்து! சின்னதா ஒரு பொற்…றாம?

3

ரோட்டரி கிளப்போ, லயன்ஸ் கிளப்போ, பேசப்போன வைரமுத்து கிளப்போ கிளப்பென ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டுவிட்டு வந்திருக்கிறார். என்னவென்று? கபாலி தோல்விப்படம் என்று. போகிற போக்கில் அவர் சொன்னதை போல இருந்தாலும், ஒரு மேடையிலிருக்கிற ஸ்கிரீன் சுருக்கத்தை கூட கவனித்துப் பேசக் கூடியவர் அவர் என்பதை உலகம் நன்கறியும். போகட்டும்… இவ்வளவு போல்டாக பேசிய நபருக்கு உலகம் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா? இன்னொரு சிங்காரவேலன்.

அவர்தான் லிங்கா படம் வெளிவந்த இரண்டாவது நாளே படம் பிளாப் என்ற முதல் குண்டை எறிந்தவர். அதற்கப்புறம் லிங்காவுக்கும் அவருக்குமான கட்டி உருளல்கள், கதறல் பிதற்றல்களை கண்டு உலகமே ஸ்தம்பித்தது தனிக்கதை. சிங்காரவேலனாவது லிங்காவுக்காக பணம் போட்டவர். வைரமுத்து எதை போட்டார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இவரும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கவிஞரை அழைத்து நிறைய பேசுகிற வழக்கம் கொண்டவர் ரஜினி. அப்படியிருந்தும் இந்த படம் குறித்து இவ்வளவு விரைவாக ஒரு முடிவை வைரமுத்து எடுப்பதற்கு என்ன காரணம்?

பாட்டெழுத வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால் இருக்கலாம். தன்னை விடுங்கள். வீட்டில் ஒரு லிரிக் என்ஜினியர் இருக்கிறார். பாட்டு பிளம்பர் ஒருவர் இருக்கிறார். கவிதை எலக்ட்ரிஷயன் வேலை கூட அவர்களுக்கு தெரியும். அவர்களில் ஒருவரையாவது பயன்படுத்தியிருந்தால், இப்படியொரு கொடுமை நிகழ்ந்திருக்குமா?

நல்லவேளை…. வைரமுத்துவின் உரை வந்த இரண்டு மணி நேரத்திற்குள் ரஜினியிடம் இருந்து ஒரு கடிதம் வந்துவிட்டது. அதில் கபாலியை வெற்றிப்படம் என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர். பார்ப்போம்… உலகம் வைரமுத்து சொல்வதை நம்புகிறதா, ரஜினி சொல்வதை நம்புகிறதா என்று!

3 Comments
 1. சல்மான் says

  யுஎஸ்ஸில் அமீர் கானின் தூம் 3 முதல் வார இறுதியில் 3.88 மில்லியன் டாலர்கள் வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அமீர் கானின் பிகே 3.5 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்த சாதனையை கபாலி நையப்புடைத்திருக்கிறது.
  முதல்வார இறுதியில் கபாலி யுஎஸ்ஸில் 4.04 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தை கைப்பற்றியுள்ளது (சில இணையதளங்களில் 3.7 மில்லியன் டாலர்கள் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இது முழுமையான வசூல் கிடையாது. ஹாலிவுட் படங்களின் வசூலை வெளியிடும் இணையதளம் 4.04 என கபாலியின் உண்மையான வசூலை வெளியிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 26 கோடிகளாகும்). இது ஓபனிங் வீக் எண்ட் வசூல் சாதனை மட்டுமே. அதேநேரம் யுஎஸ் ஒட்டு மொத்த வசூலில் சாதனை படைக்க கபாலி இது போல் ஒரு மடங்கு இன்னும் வசூலிக்க வேண்டியுள்ளது.
  சல்மான் கானின் சுல்தான் கடந்த ஞாயிறுவரை யுஎஸ்ஸில் 31.61 கோடிகளை வசூலித்துள்ளது.
  கனடா, யுகே மற்றும் அயர்லாந்து, ஆஸ்ட்ரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் கபாலியின் உண்மையான வசூல் இன்னும் வெளிவரவில்லை. ஆங்கில மற்றும் இந்தி இணையதளங்களில் மிகக்குறைவான தொகையையே கபாலி வசூல் என்று வெளியிட்டுள்ளனர். இது அந்த நாடுகளின் சில பகுதிகளில் கபாலி வசூலித்த தொகை மட்டுமே என்பது முக்கியமானது.
  கனடாவில் கபாலி 1.67 கோடிகளும், யுகே மற்றும் அயர்லாந்தில் 2.47 கோடிகளும், மலேசியாவில் 4.66 கோடிகளும் வசூலித்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

 2. அருணன் says

  எங்கள் கலியுக கடவுள் ரஜினி அவர்கள் நடிப்பில் வெளிவந்த கபாலி படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது.

  (போயி பாருடா சொரிமுத்து நாயே, தனக்கு தானே சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் மன நோயாளி இந்த சொறிமுத்து .கூடிய சீக்கிரம் அவனை கீழ்ப்பாக்கம் மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் காலம் வரும்)

 3. தமிழ்நேசன் says

  1. இந்தியாவிலேயே அதிக முதல் நாள் வசூல்

  கபாலி படம் வெளியான முதல் நாளில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி, ஷாருக்கானின் ‘Happy New Year’ முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது.

  2. சுல்தான் சாதனை முறியடிப்பு

  இந்த வருடத்தின் அதிகபட்ச வசூல் ஈட்டிய படம் சல்மான் கானின் சுல்தான். இந்த படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது.

  3. அதிகபட்ச தியேட்டர்களில் ரிலீஸ்

  இந்தியாவில் மட்டும் சுமார் 4000 திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. வெளிநாடுகளிலும் சேர்த்து சுமார் 9000 தியேட்டர்களில் ரிலீஸானது.

  4. அமெரிக்காவில் பாகுபலி சாதனை முறியடிப்பு

  அமெரிக்காவில் பிரீமியர் காட்சிகளின் மூலம் சுமார் 2 மில்லியன் டாலர் வசூல் ஈட்டி, பாகுபலி சாதனையை முறியடித்தது.

  5. கேரளா, கர்நாடகாவில் வசூல் சாதனை

  கேரளா மற்றும் கர்நாடகாவில் அந்த மாநில மொழி படங்களை விட முதல் நாள் அதிக வசூல் ஈட்டியுள்ளது கபாலி. கேரளாவில் 4.2 கோடி மற்றும் கர்நாடகாவில் 5.1 கோடி வசூலித்தது.

  6. மலாய் மொழியில் முதல் தமிழ் படம்

  பல தமிழ் படங்கள் பிற மொழிகளில் டப் செய்யப்படுகிறது. இந்திய திரைப்படங்களில் கபாலி படம் மட்டும் தான் மலாய் மொழியில் டப் செய்யப்பட்டிருக்கிறது.

  7. டிக்கெட் முன்பதிவில் செய்த சாதனை

  இப்படத்தின் டிக்கெட் முன்பதிவை கண்டு அனைவரும் அதிர்ந்தனர். முன்பதிவு திறந்த ஒரு மணிநேரத்தில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் புக்காகிவிட்டது.

  8. உலகின் பெரிய திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்திய படம்

  பிரான்சில் இருக்கும் Le Grand Rex திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்திய திரைப்படம்.

  9.முதல் வாரத்தில் அதிக வசூல் பட்டியலில் 6வது இடம்

  Star Trek, Tarzan, Ice Age, SkipTrace, The Secret Life Of Pets போன்ற ஹாலிவுட் திரைப்படங்கள் வரிசையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையோடு 6வது இடத்தை பிடித்தது கபாலி.

  10. விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்ட முதல் இந்திய படம்

  ஏர்ஏசியாவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட கபாலி படத்திற்கு விமானத்தில் கபாலி படத்தை ஒட்டி விளம்பரம் செய்தனர். அதுமட்டுமில்லாது தங்க நாணயத்தில் கபாலி, ஏர்டெல்லில் கபாலி என பிரம்மிப்பூட்டும் புரொமோஷன்கள்.

  11. இறுதியில் தன் சாதனை தானே முறியடித்த பெருமை

  இதுவரை ரஜினி நடிப்பில் வெளியான படங்களின் வசூல் சாதனையை ரூ. 210 கோடி வசூல் செய்து தன் சாதனையை தானே முறியடித்திருக்கிறார் ரஜினி.

Leave A Reply

Your email address will not be published.