வஞ்சகர் உலகம் ஸ்பெஷல் ஷோ! தூங்கி வழிந்த பிரபலங்கள்!

1

குரு சோமசுந்தரம் நடிக்கும் புதிய படம் ‘வஞ்சகர் உலகம்’. நேரடியாக வாயில் வைத்து கடிக்க வேண்டிய அப்பளத்தை, சுத்தியலால் தட்டி, வடை கரண்டியால் வாய்க்குள் தள்ளுவது போல சற்று கடினமாக பிரசன்ட் செய்திருக்கிறார்கள் இப்படத்தை. (வஞ்சகர் உலகத்தின் 25 நிமிட காட்சியை கண்டு பீதியான சம்பவம் பிரஸ்காரர்களுக்கு ஏற்பட்டு முழுசாக 48 மணி நேரம் ஆச்சு)

மனோஜ் பீதா இயக்கியிருக்கும் இப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் ஹீரோ ஹரீஷ் இயக்குனர் பாரதிராஜாவுக்கு நெருக்கமானவராம். சில தினங்களுக்கு முன் அவருக்கும் இன்னும் சில திரையுலக பிரமுகர்களுக்கும் ‘வஞ்சகர் உலகம்’ படத்தை ஸ்பெஷலாக திரையிட்டிருக்கிறார் இவர். படமே அரையிருட்டில் நடப்பதால் யாருக்கும் பிரச்சனையில்லை. இன்டர்வெல் விடும்போதுதான் ‘நாம எவ்வளவு பெரிய பாவம் பண்ணியிருக்கோம்’ என்பதே புரிந்தது படக்குழுவுக்கு. வந்திருந்த இயக்குனர்கள் சிலர், அப்படியே மல்லாக்க படுத்து குறட்டை நிலையில் இருந்திருக்கிறார்கள்.

தப்பு நம்ம படத்து மேலயா? இல்ல… நள்ளிரவில் இவங்களை அலைகழிச்சோமே, அதுவா? என்று சில நிமிஷம் குழம்பிய படக்குழு, சுட சுட டீ கொடுத்ததுடன் அல்லாமல் அவர்களையே கண்கொத்தி பாம்பாக கவனித்தும் வந்தார்களாம்.

அப்படியிருந்தும் தூக்கமும் கண்களை தழுவட்டுமே என்று தவ நிலைக்கு சென்றுவிட்டார்கள் இயக்குனர்கள். முக்கியமாக கே.பாக்யராஜ். ரிசல்ட் இப்பவே தெரிஞ்சுருச்சே மகா ஜனங்களே?

1 Comment
  1. Balaji says

    I will read a lot of cinematic articles which your articles are only different !

Leave A Reply

Your email address will not be published.