பஸ்பம் ஆனது பாலாவின் இமேஜ்! வர்மாவால் வந்த அசிங்கம்!

2

நெருப்பை முழுங்கிட்டு நீராவியா நடமாடிக் கொண்டிருப்பது போல ஒரு தோற்றத்தை எப்போதுமே தன்னை சுற்றி ஏற்படுத்திக் கொள்வார் பாலா. நெருப்பாவது… பருப்பாவது… என்று அவரது இமேஜுக்கே தீ வைத்துவிட்டார் ஒரு தயாரிப்பாளர். ‘நல்ல தரமான சம்பவம்யா இது’ என்று நாடு முழுக்க இருக்கும் பாலா குண எதிர்பாளர்கள் சந்தோஷப்படுகிறார்கள். சிலர் மட்டும் ‘ஐயோ, அவருக்கா இந்த நிலைமை?’ என்று அங்கலாய்க்கிறார்கள்.

நெட் ரிசல்ட்? பாலாவின் சட்டை கிழிஞ்சு பல மணி நேரம் கடந்துவிட்டது.

விக்ரம் மகன் துருவ்வை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் பாலா. படத்தின் பெயர் வர்மா. தெலுங்கில் வந்து சூப்பர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் இந்த காஸ்ட்லி அறிமுகம். பொங்கலுக்கு வர வேண்டிய படம், ஏனோ நொண்டியடித்துக் கொண்டிருந்தது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈ4 என்டர்டெயின்ட்மென்ட், விலங்குகள் நல வாரிய சர்டிபிகேட் வர்றதுல தாமதம். வந்ததும் மார்ச்சில் ரிலீஸ் என்று நடுவில் பேட்டியளித்தது. நடுவில் என்ன நடந்ததோ? வர்மாவை கை விடுகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

நாங்கள் நினைத்தபடி படம் சிறப்பாக அமையவில்லை. எனவே துருவ்வை தவிர படத்தில் வரும் அத்தனை பேரையும் மாற்றிவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் இப்படத்தை தயாரிக்கப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறது அந்த நிறுவனம்.

படத்தை சில வாரங்களுக்கு முன் துருவ் பார்த்ததாகவும், படு அப்செட் ஆனவர் என்னை அமெரிக்காவுக்கே படிக்க அனுப்புங்க. சினிமாவே வேண்டாம் என்று கலங்கியதாகவும் கூறுகிறார்கள். இதில் மனம் இறங்கிய விக்ரம், தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லி இத்தகைய முடிவை நோக்கி நகர்த்தியமாக சொல்லப்படுகிறது.

பதினைந்து கோடி முதல் பிரதி அடிப்படையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் பாலா. இப்போது பதினைந்து கோடியும் நஷ்டம். இந்த நஷ்டத்தை கால்ஷீட் கொடுத்து கழிப்பதாக கூறியிருக்கிறாராம் விக்ரம்.

பாலாவை வைத்து படம் எடுத்த பல தயாரிப்பாளர்களுக்கு அப்படத்தை வெளியிட்ட பின்புதான் லாஸ் வரும். ஆனால் இந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கு ரிலீசுக்கு முன்பே நஷ்டம்.

யானையை வளர்த்தா விட்டை மிச்சம்! எருமைய வளர்த்தா சாணி மிச்சம்! இந்த தயாரிப்பாளருக்கோ எதற்கும் தேறாத வர்மாதான் மிச்சம்!

2 Comments
  1. Jeevan S says

    பாலா விக்ரமுக்கு சேதுல வாழ்கை கொடுக்கலைனா, இப்ப துருவே யாருக்கும் தெரிஞ்சுருக்காது. துருவ் ஏதாவது IT கம்பனியிலோ, இல்ல ஒரு அசிஸ்டன்ட் டிரேக்டராவோ தான் இருந்துருப்பான். பாலா இயக்கியது மொத்தமா எட்டு படம். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் – மொத ஐந்து படம் ஹிட். கடைசி லேட்டஸ்ட் மூணும் – பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் – செம பிளாப். பாலா சரக்கு தீந்து ஐந்து வருஷம் ஆவுது. இது கூட விக்ரமுக்கு தெரியலையா பாலாவை டைரக்டரா போடறது முன்னாடி? விஜய், அஜித் இவங்க மொத படத்துலையாவ ஸ்டார் ஆனாங்க? விஜய் ஒரு எட்டு உப்மா படம் பண்ணி தான், ஒன்பதாவதா பூவே உனக்காக பெரிய ஹிட் கொடுத்தார். பாலா உப்மா எடுத்திருந்தா ரிலீஸ் பண்ணிருக்கலாம், விக்ரம்க்கு வாழ்க்கை கொத்துக்காக. படம் பிளாப் ஆனா என்ன? விக்கரம் தன் பயனை வெச்சு இன்னமும் ஐந்து படம் பூஜை பண்ணிருக்கலாம். இப்படி பாலாவை அசிங்க படுத்தி இருக்க கூடாது. பாலாவும் குப்பை கொட்டுவதை விட்டு விட்டு ஒழுங்கா ஸ்கிரிப்ட் பண்ணவும். பாலாவின் திமிரும், விகாரமின் சுயநலமும், பாலாவை தெருவவுக்கு கொண்டு வந்து விட்டு விட்டது. கடைசியா, ஒரு நடிகனின் மகன் நடிச்சே ஆகா வேண்டுமா? வெச்சிருக்கிறது ஆட்டோ, பாலா இல்ல, எந்த கொம்பன் ஓடுனாலும் கார் ரேஸ்ல ஜெயிக்க முடியாது.

  2. Anand says

    Bala is a legend already. He will comeback strongly. But Dhuruv thambi, you still to prove what you are capable of as an actor? So, Dhruv thambi, your legend Bala mama is still the winner even though he is replaced by some other director.

Leave A Reply

Your email address will not be published.