வரலட்சுமி… இதுதானா உங்க ஆணாதிக்க எதிர்ப்பு?

1

இமேஜ்ல குண்டு வச்சுட்டு, இஷ்டத்துக்கு டேமேஜ் பண்ற வழக்கம் இப்பதான் வந்திச்சா? இல்ல ‘பாவனா பலாத்காரம்’ காலத்திற்கு முன்பிருந்தே அப்படி நடக்குதா? என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் போனால், அது அரசியலாகிவிடும். அதனால் ஸ்ரெயிட்டா மேட்டருக்கு வந்திடலாம்.

பாவனா சம்பவம் வெளியில் தெரிந்த பின்பு, சுமார் ஒரு டஜன் நடிகைகள் “என்னைய அவன் கைய புடிச்சு இழுத்தான்” என்று பேச ஆரம்பித்ததை பெரும் அதிர்ச்சியோடு கவனித்தது உலகம். “என்னை கார்ல கடத்திட்டு போக ட்ரை பண்ணினான். நான் கத்திய காட்டி தப்பிச்சேன்” என்றெல்லாம் என்று ஒரு பெண் கவிஞர் ஒரு இயக்குனர் மீது பழி போட்ட கதையெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்தது. இன்னொரு நடிகை இறந்து போன ஒரு ஒளிப்பதிவாளர் “என்னை தப்பான எண்ணத்தோடு கூப்பிட்டார்” என்று சொன்னதை, அடப்பாவிகளா… அதிர்ச்சியோடு உள் வாங்கிக் கொண்டது ஊர்.

இந்த நேரத்தில், நானும் ஒரு பந்தத்தை கொளுத்துறேன் என்று கொளுத்திப் போட்டார் வரலட்சுமி. இவர் பாவனா மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக சேவ் சக்தி என்றொரு அமைப்பை சமீபத்தில் தொடங்கியிருக்கிறார். தமிழில் வந்து பெரும் வெற்றி பெற்ற அப்பா திரைப்படம் மலையாளத்தில் ரீமேக் ஆகிறது அல்லவா? அதில் சமுத்திரக்கனிக்கு மனைவியாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நம்ம வரலட்சுமிதான். ஷுட்டிங்குக்காக கேரளா போன வரு, போன வேகத்தில் திரும்பிவிட்டார்.

அப்படத்திலிருந்து தான் விலகிவிட்டதாக அறிவித்தவர், காரணம் கேட்ட பிரஸ்சிடம் “ஆணாதிக்கம் ஓவரா இருக்கு” என்று பூடகமாக ஒரு பதிலை சொல்லிவிட்டு அதோடு முடித்துக் கொண்டார். ஐயோ… வேற ஏதும் தப்பாயிருக்குமோ? என்ற கோணத்தில் மீடியாக்கள் அதிர்ச்சியானது தனிக்கதை. இந்த நிலையில்தான் சமுத்திரக்கனியிடம் இது குறித்து கேட்டோம்.

“கேரளாவில் மோகன்லாலுக்கு சொந்தமான பெரிய கெஸ்ட் அவுஸ் இருக்கு. அங்குதான் வரலட்சுமி தங்குவதற்கு ரூம் கொடுத்தோம். ஒரு நாள் வாடகையே ஏழாயிரத்திற்கும் மேல். அவ்வளவு சிறப்பான இடம் அது. நாங்க எல்லாருமே அங்குதான் தங்கினோம். ஆனால் வரலட்சுமி மட்டும், பைவ் ஸ்டார் ஓட்டல் வேணும்னு கேட்டார். கேரளாவில் சினிமாவுக்கு ஒதுக்குற பட்ஜெட் எப்படின்னு நான் தனியா சொல்லத் தேவையில்ல. தயாரிப்பாளர் அவ்வளவு செலவு பண்ண முடியாதுன்னு சொன்னார். அவங்க படத்திலேர்ந்து விலகுறேன்னு சொல்லிட்டு வந்திட்டாங்க” என்றார்.

கேட்ட ஓட்டலில் ரூம் போட்டு தராததெல்லாம் ஆணாதிக்கம் லிஸ்ட்ல வருமா? ஒரு டவுட்டுதேன்!

1 Comment
  1. Rajii says

    Aana producer Vera karanam solli pertti koduththar. Avanga slim aakittanga antha rolelukku porutham illai endru.
    Yarai namburathu.
    Thalaivarukku oru complaint koduththa pochu😷😷

Leave A Reply

Your email address will not be published.