வேலைக்காரன் விவகாரம்! விஷால் மவுனம்?

0

“சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு என்று சிறகை விரிக்க, இது ஒன்றும் பரப்பன அக்ரஹாரமல்ல. சங்கம்யா… சங்கம்”! என்று பல்லை கடிக்கிறது பல உதடுகள். ‘கட்டுப்பாட்டுக்கு அடங்காதவங்களை கண்டந்துண்டமா வெளியேத்துங்க’ என்றும் கூட சிலர் பற்களை நறநறக்கிறார்கள். ஆனால் பதில் சொல்ல வேண்டிய சிவகார்த்திகேயனோ, பதில் கேட்க வேண்டிய விஷாலோ மவுனம் காத்து வருவதால், டென்ஷன் கோயிங் ஆன்…!

விவகாரம் இதுதான். நேற்று காலை நாளேடுகளில் ‘வேலைக்காரன்’ படத்திற்காக ஒரு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. பல லட்சம் வாரியிறைக்கப்பட்டு இப்படி கொடுக்கப்படும் விளம்பரங்களால், சம்பந்தப்பட்ட படத்திற்கு அட்ராக்ஷன்தான். என்றாலும், எல்லா தயாரிப்பாளர்களாலும் இப்படி அரை கோடி முக்கால் கோடி செலவு செய்து விளம்பரம் கொடுக்க முடியாதல்லவா? அதனால் தயாரிப்பாளர் சங்கமே தனக்குள் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கியிருந்தது. எந்த தயாரிப்பாளரும் அவரவர் படங்களுக்கு விளம்பரம் கொடுக்கும் போது இந்த அளவுகளை மீறக்கூடாது என்று கட்டம் கட்டியிருந்தார்கள். நாளிதழில் கால் பக்கம் என்பதுதான் அதிகப்படியான விளம்பரம். ஆனால் நேற்று நடந்தது முற்றிலும் விதி மீறல். அத்து மீறல். ஆணவம். திமிர் என்று ஆளாளுக்கு சொல் வீச ஆரம்பித்துவிட்டார்கள். உடனே நியாயம் வேணும் என்றும் குரல் கொடுக்க….

சங்கத்தின் தலைமை பலத்த மவுனத்திலிருக்கிறது. இத்தனைக்கும் நேற்று நடந்த செயற்குழுவில் இது பற்றி பேச்சை எடுத்தவர்களின் வாயையும் அடைத்துவிட்டாராம் விஷால். ஏன்? முன்னோர்கள் போட்ட விதியை முதலில் மீறியவங்க யாரோ? அவங்க மேலதான் முதல்ல நடவடிக்கை எடுக்கணும்? சிவகார்த்திகேயன் கடைசியாதானே தப்பு பண்ணினார் என்பது விஷால் பக்க நியாயமாக இருக்கலாம்.

சரி… விதியை மீறிய முன்னோர்கள் யார் யார்? படத்தை சொல்லிவிடுகிறோம். ஆளை கண்டு பிடிச்சுக்கோங்க.

விக்ரமின் பத்து எண்ணுறதுக்குள்ள, விஜய்யின் பைரவா, ரஜினியின் கபாலி.

ஆக… முனீஸ்வரன்னா அருவா, முனுசாமின்னா மொக்க பிளேடுன்னுதான் காலம் ஓடும் போல!

Leave A Reply

Your email address will not be published.