பெரிய மீனுக்கு ஆசைப்பட்டு பெருமையிழந்த நயன்தாராவின் காதலர்!

0

ஒருவழியாக சூர்யாவின் காம்பவுன்டுக்குள் கமுக்கமாக செட்டில் ஆகிவிட்டார் விக்னேஷ் சிவன். இந்த இடத்தை பிடிக்க அவர் பட்ட பாடு… ஹப்பப்பாவ்…! ஆனால் ‘நானும் ரவுடிதான்’+படம் வந்த சில நாட்களுக்குள்ளேயே ஒரு நல்ல முன் பணம் கொடுத்து தனது கம்பெனிக்கு படம் செய்து தர அழைத்தவர் ஏ.எம்.ரத்னம். விஜய் சேதுபதி நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஏற்பாடு.

என்ன காரணத்தாலோ அந்த படத்தை பற்றிய அக்கறையே இல்லாமலிருந்த விக்னேஷ்சிவன், சூர்யா வீட்டுக்கு நடையாய் நடந்து அவரை கரைத்துவிட்டார். இத்தனைக்கும் அவர் இயக்கப் போவது ஒரு ரீமேக் படம் என்கிறது தகவல்கள். இந்த நிலையில்தான், விக்னேஷ்சிவன், சூர்யா கூட்டணியை கண்டு அப்செட் ஆகியிருக்கிறார்கள் விஜய் சேதுபதியும் ஏ.எம்.ரத்னமும். வேறொரு தயாரிப்பாளராக இருந்திருந்தால், சிவகார்த்திகேயனை அழ விட்ட மாதிரி விக்னேஷ் சிவனை அழ விட்டிருப்பார்கள். ஆனால் ரத்னம், ஒரிஜனல் ரத்னமாச்சே!

அமைதியாக விட்டுவிட்டார். அதே விஜய் சேதுபதி கொடுத்த தேதியில் அதே நயன்தாரா ஜோடியாக நடிக்க, ரேணி குண்டா பன்னீர் செல்வம் இயக்கப் போகிறாராம். ஏ.எம்.ரத்னத்திற்கு அல்வா கொடுத்துவிட்டுதான் விக்னேஷ் சிவன் நம்ம காம்பவுன்டில் ஒதுங்கியிருக்கிறார் என்ற தகவலே, சற்று தாமதமாகதான் தெரிய வந்ததாம் சூர்யாவுக்கு.

விஷயத்தை பெருசு பண்ணாமல் விட்ட ரத்னம் பெரிய மனுஷனா? ‘அவரு வரலேன்னா பரவால்ல சார். நீங்க சொல்ற டைரக்டருக்கு நடிச்சுத் தர்றேன்’ என்று இறங்கி வந்த விஜய் சேதுபதி பெரிய மனுஷனா? நெகிழ வைக்கிறாங்களேப்பா…

To listen audio click below:-

 

Leave A Reply

Your email address will not be published.