விஜய் அட்லீ கன்பார்ம்! கோடம்பாக்கத்தில் பரபரப்பு!

0

தாணு மாதிரியான அனுபவம் மிக்க தயாரிப்பாளர்களுக்கே புது அனுபவத்தை(?) கற்றுக் கொடுக்கிறளவுக்கு டாம்பீக இயக்குனர் ஒருவர் உண்டென்றால் அது அட்லீதான். அவர் படத்தில் வருகிற எறும்பு கூட, எக்கச்சக்க சம்பளம் வாங்கிக் கொண்டுதான் உள்ளே வந்திருக்கும். ஏனென்றால், அது அட்லீ எழுதுன எறும்பாச்சே என்பார்கள் திரையுலகத்தில்.

இப்படி சட்டை, டவுசர், பொட்டி, ஜட்டி என்று எல்லாவற்றையும் பதம் பார்க்குமளவுக்கு பட்ஜெட்டை இழுத்துவிடுகிற இவரை, விஜய் நம்புவதால்தான் அட்லீ பிழைப்பு அன் லிமிடெட் வேகத்தில் போய் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் அட்லீயின் லேட்டஸ்ட் பாய்ச்சல் துவங்கிவிட்டது.

இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. விஜய்க்கு 50 கோடி சம்பளம். அட்லீக்கு 22 கோடி சம்பளம் என்று சொல்லப்படுகிறது. முதல் தகவல் அறிக்கையிலேயே பீதியை கிளப்பும் இந்த கூட்டணி, போக போக இன்னும் என்னென்ன பீதிகளை தரப்போகிறதோ?

எனிவே… கஞ்சத்தனத்திற்கு பெயர் போன ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு தாராளத்தை சொல்லித்தரட்டும் அட்லீ!

Leave A Reply

Your email address will not be published.