என்னது…? விஜய்க்கு பில்லி சூனியம் வச்சுட்டாங்களா?

1

இன்று வெளியாகியிருக்கும் நக்கீரன் புலனாய்வு இதழில் அதிர்ச்சிகரமான ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்கள் வெளியாகிற நேரங்களில் எல்லாம் அவரது படங்களை முடக்க பெரிய சதி நடக்கிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் அவர் படங்கள் திரைக்கே வருகின்றன. பல கோடி ரூபாய் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்யும் விநியோகஸ்தர்கள் முன்பெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு விஜய் படத்தை வாங்குவார்கள். இப்போது அவர்கள் அத்தனை பேருக்கும் அச்சம் ஏற்படுத்துவதை போல சூழ்நிலைகள் அமைந்து வருகின்றன. அல்லது அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலை அப்படியே நீடித்தால், விஜய் படங்களை வாங்கவே ஆளிருக்காது என்கிற சூழ்நிலை ஏற்பட்டாலும் ஆச்சர்யமில்லை. விஜய் மட்டுமல்ல, அவரை சுற்றியிருப்பவர்களும் இந்த சிக்கலை தீர்ப்பது எப்படி என்கிற பெரும் கவலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி முதல்வரை சந்திக்க தொடர்ந்து நேரம் கேட்டுக் கொண்டேயிருக்கிறாராம். இந்த நிலையில்தான் இதற்கெல்லாம் காரணம், அரசியல் அல்ல. பில்லி சூனியம் என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறாராம் விஜய்யின் அம்மா ஷோபா.

உடனடியாக கேரள மாந்திரீகர்களை அழைத்து வந்து விஜய்க்கு வைக்கப்பட்டுள்ள பில்லி சூனியத்தை அகற்ற வேண்டும் என்று அவர் விரும்புவதாக நக்கீரன் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, குடும்பத்தோடு வேளாங்கண்ணி சென்று மாதாவை தரிசிக்கவும் ஏற்பாடாகி வருகிறதாம்.

1 Comment
  1. jessy says

    கரெக்ட் அண்ணன் அடுத்த முதல்வரா ஆயிட கூடாதுன்னு யாரோ பில்லி சூனியம் வெச்சிட்டாங்க. அதான் இப்படி…!!!!

Leave A Reply

Your email address will not be published.