இன்னும் 100 நாள் இருக்கு! இப்பவே ஆரம்பித்த விஜய் ஃபேன்ஸ்!

2

ஒவ்வொரு வருடமும் விஜய் பிறந்த நாளை அமர்க்களம் ஆக்கிவிடுவார்கள் அவரது ரசிகர்கள். முக்கியமாக நலத்திட்ட உதவிகள் விஜய் பெயரால் நடத்தப்படும். சில ஏரியாக்களுக்கு விஜய்யே விசிட் அடித்து அந்த பொருட்களை வழங்கிய காலங்களும் உண்டு. ஆனால் இந்த முறை அட்லீ படத்தில் பிசியாக இருக்கும் விஜய், நேரடியாக கலந்து கொண்டு உதவிகளை வழங்குவாரா என்பது சற்றே டவுட்!

எப்படியிருந்தாலும், அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கவாவது அவர் வருவார் என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். பிறக்கும் போதே விஜய் கையால் மோதிரம் பெறவிருக்கும் குழந்தைகள் எத்தனை பேரோ? அவர்களுக்கும் சேர்த்தே வாழ்த்துக்களை சொல்லி வைப்போம்.

இதற்கிடையில் எந்த வருடமும் இல்லாத திரு வருடமாக இந்த வருடத்தில் வேறொரு அமர்க்களம் நடந்திருக்கிறது ரசிகர்கள் மத்தியில். யெஸ்… ஜுன் 22 ந் தேதியான விஜய் பிறந்த நாளுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், இப்பவே 100DAYS FOR VIJAY BIRTHDAY என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர ஆரம்பித்திருக்கிறார்கள்.

அட… இது கொஞ்சம் புதுசா இருக்கே?

2 Comments
  1. Rajesh says

    Edotor Kodutha kasukku mela koovararupa…

  2. ஸ்டாலின் says

    இதெல்லாம் அவனாகவே செய்து கொள்ளும் பில்டப் . மக்கள் மிக மிக தெளிவாக உள்ளனர். இனி சினிமாக்காரர்களை மக்கள் ஓட ஓட விரட்ட போகிறார்கள்

Leave A Reply

Your email address will not be published.