சர்கார் வியாபாரம்! சிக்கலில் மாட்டுவாரா விஜய்?

1

தமிழ்சினிமா வரலாற்றையே புரட்டிப் போட்டுவிட்டது சர்கார் படத்தின் வியாபாரம். கோடம்பாக்கத்தில் நாலு பேர் கூடினால், பரபரப்பாக பேசுகிற விஷயமும் இதுவாகதான் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் பெருத்த சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறார் விஜய் என்ற தத்தமது அனுபவ அறிவை கொட்டி அலசுகிறார்கள் அதே சினிமாக்காரர்கள். என்னதான் நடந்தது?

‘மெர்சல்’ படத்தின் கலெக்ஷன் நிஜமாகவே (?) நூறு கோடியை தாண்டியது. இந்த விறுவிறு வெற்றிக்குப்பின் வரப்போகிற ‘சர்கார்’ பட வியாபாரம் ‘மெர்சல்’ வசூலை விட சில கோடிகள் அதிகமாக இருப்பதுதானே நியாயம்? ஆனால் தமிழ்நாடு தியேட்டர் உரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளும் சேர்த்து சுமார் 200 கோடியை எட்டியிருக்கிறது. ரஜினியின் முந்தைய படங்களுக்குக் கூட இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை.

மிக மிக திட்டமிட்டு செய்யப்பட்ட வியாபாரமாக இருந்தாலும், இரண்டு டிரான்ஸ்பார்மர்களுக்கு நடுவே ஓடுகிற ஆயிரம் வாட்ஸ் அபாயக் கம்பி மேல் நடப்பது போலொரு சிக்கல் இருக்கிறது இதற்குள். ஒருவேளை படம் சறுக்கினால், விஜய்யின் அடுத்த படங்களில் கை வைக்க தயங்க மாட்டார்கள் வியாபாரிகள். என்னதான் ‘இந்த படத்திற்கு நான் தயாரிப்பாளர் இல்லை’ என்று தப்பித்தாலும் சினிமா விட்டுவிடாது என்பதை அறிந்தவர்தான் அவரும்.

இதற்கு முன் பல படங்களுக்கு தன் கைப்பணத்தை கொட்டி நஷ்டம் அழுதவரும் கூட! அப்படியிருக்க… இந்த இருநூறு கோடி பிசினஸ் சந்தோஷமா, கவலையா? அவரது சொந்த பெருமூச்சுதான் சொல்ல வேண்டும் அதை!

1 Comment
  1. தமிழ் பிரபாகரன் says

    சர்க்கார் பெரும் தோல்வியை சந்திக்க இருக்கிறது. விஜய் இனி அவ்வ்ளவு தான். அப்பாவி ரசிகர்களை இனி அவன் ஏமாற்ற முடியாது. அவனின் உண்மையான சுயரூபத்தை கண்டு, அவனது ரசிகர்கள் அவனை வெறுக்க துவங்கி விட்டனர். அதன் எதிரொலி தான் சர்க்கார் படு தோல்வி.

Leave A Reply

Your email address will not be published.