கண்டுக்காத விஜய்! கவலைப்படாத கருணா!

2

அவரது ஏழு தலைமுறைக்கும் தேங்கா உடைச்சு, வரப்போற மிச்ச தலைமுறைக்கும் மாஞ்செடி நட்ருவாய்ங்க போலிருக்கே? என்கிற அளவுக்கு நடிகர் கருணாகரனை திட்டித் தீர்க்கிறார்கள் விஜய் ரசிகர்கள். கருத்து சுதந்திரத்திற்கும், கண்மூடித்தனமான ரசிகர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்கிற கேள்வியை எழுப்பிய கொடூரமான நிகழ்வு அது.

சில தினங்களுக்கு முன் ‘சர்கார்’ பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்யின் சொற்பொழிவு பலத்த கைதட்டல்களை அள்ளியதை யாரும் மறுக்க முடியாது. அது முன்னேற்பாடு செய்யப்பட்ட ஸ்கிரிப்டா? ஸ்பாட்டில் வந்து விழுந்த வெடிகுண்டுகளா? என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்தால், கருணாகரன் நிலைமைதான் மற்றவர்களுக்கும். ஸோ… லீவ் இட்!

விஜய்யின் பேச்சை சற்றே நக்கல் தொணியில் கருணாகரன் விமர்சனம் செய்ய, பிலுபிலுவென அவரை பிடித்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். அசிங்க அசிங்கமான காமென்ட்ஸ். நாக்கை பிடுங்கிப் போடுகிற அளவுக்கு நாராச வார்த்தைகள் என்று போனது நிலைமை. சிலர் கொலை அச்சுறுத்தல் அளவுக்கு போனார்கள். அதற்காக அடங்கிப்போகவில்லை கருணாகரன். பதிலுக்கு பதில் நக்கல் அடித்துக்கொண்டே இருந்தார். விஜய் ரசிகர்களின் மிரட்டல்களையும் அவர் விஜய்க்கு டேக் செய்து கொண்டிருந்தார்.

அப்புறமும் பிரச்சனை நின்றபாடில்லை. ஆனால் இவ்வளவையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார் விஜய். சும்மாயிருங்க ஜென்ட்டிமேன்ஸ் என்று ஒரு வார்த்தை கூறியிருந்தால், யானை இந்தளவுக்கு மதம் கொண்டிருக்கப்போவதில்லை. மிதிக்கிற வரைக்கும் மிதிக்கட்டும். கடைசியில் வந்து கலகத்தை முடிப்போம் என்று நினைக்கிறவர் இல்லை அவர். குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு போயிருக்கும் விஜய்க்கு இந்த தகவல்கள் போய் சேர்ந்திருக்குமா என்பதுதான் டவுட்.

விஜய் ரசிகர்கள் தங்கள் கச்சேரியை நிறுத்த மாட்டார்கள் என்பது தெரியும். ஆனால் கருணாகரனாவது பதிலுக்கு பதில் பேசுவதை நிறுத்தியிருக்கலாம் அல்லவா? இருவரில் ஒருவர் பெருந்தன்மை காட்டாத வரைக்கும் இந்த பிரச்சனைக்கு முடிவில்லை.

வெற்றி‘கார’மான இரண்டாவது வாரம்… மூணாவது வாரம்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிடாதீங்கய்யா!

2 Comments
  1. தமிழ் பிரபாகரன் says

    விஜய் ஒரு கோழை. பயந்தான்கொள்ளி பய. தனது அப்பாவி ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு தனது கல்லாவை நன்கு நிரப்பி கொள்கிறான். அவனது உண்மையான சுயரூபத்தை தெரிந்த ரசிகர்கள், அவனது ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு அவன் மூஞ்சியில் காரி துப்பி வருகிறார்கள்.

  2. tamilfan says

    Innum Evvalavu naal thaan vijaykku sombu thookunveenga newtamilcinema. sombu thookies. ok panam varuthu, so avaru enna senjalum neenga ahaa ohoo nu sollite than iruppeenga

Leave A Reply

Your email address will not be published.