விஜய் பட வசூலும் பாகுபலி2 வசூலும்! அட… இப்படியும் ஒரு சந்தோஷம்!

3

சினிமா ஏரியாவில் மிக முக்கியமான சொல் ட்ரென்ட்! “இப்போதைக்கு இதுதான் ட்ரென்ட் சார்…” என்று கதை சொல்வதற்கு முன்பே கதாநாயகர்களை ‘ரெடி’ பண்ணுகிற வழக்கம் ஒவ்வொரு இயக்குனருக்கும் இருக்கிறது. விளைவு? ஓநாய் ஊளையிட்ட மாதிரி ஒரே டைப்பான படங்கள் தொடர்ந்து எடுக்கப்படும். ரசிகனும் ‘சனியன் விட மாட்டேங்குதே’ என்ற வருத்தத்தை மனசுக்குள் புதைத்துக் கொண்டே அந்த கழிசடைகளை ரசித்து வைப்பான்.

இப்போது நிலவி வரும் பேய் ட்ரென்ட், இன்னும் எத்தனை நாளைக்கு கொல்லுமோ என்கிற கேள்விக்கு பாகுபலி ஒரு சரியான பதிலை கொடுத்திருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் கலெக்ஷனும் இனி வரும் காலங்களில் நிறைய சரித்திர படங்கள் உருவாக ஒரு வழியேற்படுத்திக் கொடுக்கும். இப்பவே 1000 கோடி செலவில் மலையாளத்தில் மகாபாரதக் கதையை எடுக்கவிருக்கிறார்களாம். 300 கோடி செலவில் சங்கமித்ரா என்ற படத்தை உருவாக்கவிருக்கிறது தேனான்டாள் பிலிம்ஸ். நல்ல விஷயம். இந்த ட்ரென்ட் அலுக்கும் வரை அதை வரவேற்றுவிட வேண்டியதுதான்.

சரி… மேட்டருக்கு வருவோம். பாகுபலி 2 வின் முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு என்று கணக்கு பார்க்க துடியாய் துடித்த நெஞ்சங்களுக்கு வாயை பிளக்கிற மாதிரி செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. உலகம் முழுக்க ஒரே நாளில் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறது பாகுபலி2. இதில் சென்னை வசூல் எவ்வளவு?

முதல் நாளில் சென்னையில் மட்டும் 91.4 லட்சம் ரூபாய் வசூல் வந்திருக்கிறதாம். இங்குதான் விஜய் ரசிகர்கள் என்ஜாயோ என்ஜாய். இந்த அமவுண்ட் சென்ற வருடம் வெளியான ‘தெறி’ படத்தின் முதல் நாள் வசூலை விட 10 லட்சம் குறைவு என்கிறார்கள்.

ஆத்தாடி…. ராஜமவுலியையே கதற விட்டுட்டாரே விஜய்?

3 Comments
  1. praveen says

    Theri was a festival (Diwali) release. Each theatre in Chennai had 6 shows. Bhahubali 2 is a normal working day release and due to some issues there was no morning shows. In Chennai it started its collection from matniee shows. This is the fact.

  2. Podhu Janam says

    Theri Diwali release ah??? Ara mandaiya, it was released on Apr 14th. It had only 4/5 shows in most of the theatres…

  3. praveen says

    Ada mara Mandaiya, Naan sollavanthathu festival release engira vidumurai vassol pathiya visayam. Diwali release enpathu thavaru thaan. Anal satharana velai nalukkum vidumurai nalukkum ulla vithiyasam thriyamal vasoolai comapre pannuvathu nallava irukku? ithu ella nadigargalukkum porunthum. Tamil varudapirappu enpathu diwali , pongal ponra oru mukkiayamana visehsa nall enpathu pothujanam enra mara mandaikku theriyatha?

Reply To praveen
Cancel Reply

Your email address will not be published.