குறி சொல்ல தெரியாத கோடங்கிக்குதான் எட்டணா சைஸ்ல பொட்டு வேணும். -விஜய்க்கு எதுக்குப்பா அட்வைஸ்?

0

‘லைக்கா’ மொபைல் அதிபர் சுபாஷ்கரண் அல்லிராஜாவின் தாயார் பிறந்த நாள் லண்டனில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இங்கிருக்கும் ‘கத்தி’ டீம் அத்தனை பேரையும் அழைத்திருந்தார் அவர். தனி பிளைட் போடவும் திட்டமிட்டிருந்தார். அதற்குள் இங்கு செய்தி கசிந்துவிட்டது. ‘ராஜபக்சேவின் கூட்டாளி வீட்டு விசேஷத்திற்கு செல்வதா?’ என்று அத்தனை ஊடகங்களும் அபாய சங்கு ஊத, முருகதாஸ், சமந்தா, அனிருத் ஆகியோர் திட்டத்தை கைவிட்டுவிட்டு கம்பி நீட்டினார்கள்.

ஆனால் விஜய் மட்டும் குடும்பத்தோடு சென்று விட்டார். சென்னைக்கும் திரும்பிவிட்டார். அவர் போனதும் தெரியவில்லை. வந்ததும் தெரியவில்லை. ஆனால் ‘ஏற்கனவே திகுதிகுங்குது. இந்த நேரத்தில் இந்த ட்ரிப் தேவையா?’ என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.

குறி சொல்ல தெரியாத கோடங்கிக்குதான் எட்டணா சைஸ்ல பொட்டு வேணும். விஜய்க்கு எதுக்குப்பா அட்வைஸ்?

பின்குறிப்பு- இதற்கிடையில் விஜய் வெளிநாடு போனது உண்மைதான். ஆனால் அது லண்டன் அல்ல என்றும் மறுக்கிறார்கள் அவரது தரப்பினர். லைக்கா வீட்டு விசேஷத்திற்கு அவர் ‘லைக்’ கொடுக்காமலிருந்தால் சந்தோஷம்தான்!

Leave A Reply

Your email address will not be published.