நாங்கள்லாம் தனுஷ் பேன்ஸ்! விஜய்யின் அம்மா ஷோபா தந்த இன்ப அதிர்ச்சி!

0

இன்று சென்னையில் நடந்த ‘கொடி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அப்படத்தின் இயக்குனர் துரை.செந்தில் குமார் பேசியதை கேட்டிருந்தால் விஜய் ரசிகர்கள் அடக்கடவுளே… ஆகியிருப்பார்கள். வீட்டிலேயே ஒரு வெள்ளி பீரோவை வைத்துக் கொண்டு, பக்கத்து வீட்டு பீரோவை பார்த்து பெருமூச்சு விட்டால், அதிர்ச்சி வராதா பின்னே?

கொடி படத்தில் மிக முக்கியமான ரோலில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருக்கிறாராம். அவரை நேரில் சந்தித்து கதை சொன்னாராம் துரை.செந்தில்குமார். முழு கதையையும் கேட்ட எஸ்.ஏ.சி, நான் டைரக்ட் பண்ணுற படத்தில்தான் நான் நடிப்பது வழக்கம். வேறொருத்தர் டைரக்ஷன்ல நடிக்கறது பற்றி யோசிக்கணும். கிளம்புங்க என்று கூறிவிட்டாராம். என்னடா இப்படியாகிருச்சே… என்று கவலையோடு கிளம்பிய செந்தில்குமாருக்கு, காரில் வரும்போதே இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் எஸ்.ஏ.சி.

“தப்படத்தில் நான் நடிக்கிறேன்ப்பா. வீட்ல என் மனைவிகிட்ட சொன்னேன். அவங்க நாங்கள்லாம் தனுஷ் பேன்ஸ். அவருடன் சேர்ந்து நடிக்கிற வாய்ப்பை மறுத்திட்டீங்களே… என்று வருத்தப்பட்டாங்க. அதனால் நான் நடிக்கிறேன்” என்றாராம்.

ஒரு காலத்தில் அரசியல் படம்னாலே எஸ்.ஏ.சி சார்தான். அவரையே இந்த படத்தில் நடிக்க வச்சுருக்கோம்னா அது மகிழ்ச்சி என்றார் துரை செந்தில்குமார்.

ஒருவேளை விஜய் கால்ஷீட்டுக்கு ரூட்டு போட்றாரோ?

To listen audio click below:-

 

Leave A Reply

Your email address will not be published.