உடனே பண்ணுங்க! அட்லீக்கு ஆர்டர் போட்ட விஜய்

2

அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், அம்மனுக்கும் ஒரு வணக்கம் போடுகிற ‘பேலன்ஸ்’ மனசுக்காரர்கதான் விஜய். அவருக்கு இஸ்லாமிய நண்பர்களும் ஏராளம். இனம் மதம் என்கிற பாகுபாடில்லாமல் எல்லார்க்கும் பிடித்தவரான விஜய், படத்திலும் அப்படி சர்வ மத கேரக்டரில் நடிப்பது ரொம்பவே ரேர்…!

இந்து முஸ்லீம் கிறிஸ்துவ நம்பிக்கை கொண்டவர்களுக்கு தோதாக ஒரு கேரக்டர் வந்தால், பிரித்து மேய்ந்துவிடுவார் அல்லவா? அந்த கொண்டாட்டத்தை விஜய்க்கு வழங்கியிருக்கிறார் அட்லீ. விஜய் 61 ல் விஜய்க்கு மூன்றுவித கேரக்டர்கள். இந்து முஸ்லீம் கிறிஸ்துவராக வருகிறார்களாம் அம்மூவரும். இதற்காக தன் கெட்டப்பையும் மூன்று விதமாக மாற்றியிருக்கிறார் விஜய்.

இதற்கிடையில் இந்த படத்தின் தலைப்பு, ‘தளபதி’ என்று சோஷியல் மீடியாக்களில் ஊதி விட்டுவிட்டார்கள். வைரலாக பரவிவிட்டது விஷயம். அதற்குள் சுதாரித்துக் கொண்ட விஜய், அட்லீயிடம் சுட்டிக்காட்டி, உடனே விளக்கம் கொடுங்க என்றாராம். உடனடியாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 Comments
  1. Velan. G says

    காப்பி பேஸ்ட் விஜய். படம் படுதோல்வி அடைய வாழ்த்துக்கள்

  2. ரவி says

    இந்த நாய்க்கு நடிக்கவே தெரியாது இதுல மூணு கெட்டப் ஒரு கேடா

Leave A Reply

Your email address will not be published.