சசி உள்ளே… விஸ்வரூபம் எடுக்கும் விஜய்!

1

விஜய் படங்கள் வெளிவரும் போதெல்லாம் எங்கிருந்தோ பறந்து வரும் உத்தரவுகள். அதை தொடர்ந்த தடங்கல்கள் பெரும் சிக்கலை உண்டு பண்ணும் அப்படத்திற்கு. சந்துக்குள்ளிருந்து திடீர் திடீரென தலையை நீட்டி, படத்திற்கு எதிராக கட்டையை போடுவார்கள். எல்லா போராட்டத்தையும் முறியடித்துதான் ஒவ்வொரு முறையும் அவரது படங்கள் திரைக்கு வரும். முக்கியமாக முன்னாள் முதல்வர் அமரர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது விஜய் படங்களுக்கு விழுந்த கட்டைகள், கொஞ்ச நஞ்சமல்ல.

அதற்கு காரணம், விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பதற்றம்தான். வரும்போதே வாலை நறுக்க வேண்டும். யோசிக்கும் போதே மென்னியை பிடிக்க வேண்டும் என்ற அடக்குமுறைதான். ஆனால் ஒரு கட்டத்தில் அமைதியாகிவிட்ட விஜய், எதற்காகவோ காத்திருந்தார். யெஸ்… அவர் காத்திருந்தது வீண் போகவில்லை. ஜெ. உத்தரவில் விஜய்யை நசுக்கி வந்தவர் சசிகலாதான் என்பதால், சசிகலாவின் ரூட் கிளியர் ஆவதற்காகவும் காத்திருந்தார் விஜய்.

தன்னை சந்திக்க வரும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் பேசும்போதெல்லாம், “நல்ல நேரம் வரும்போது நானே சொல்றேன். அதுவரை பொறுமையா இருங்க ப்ளீஸ்” என்றே கூறி வந்தார். அந்த நல்ல நேரம் பிப்ரவரி 14 ந் தேதி காலை பத்தரை மணிக்கு வந்து சேர்ந்தது அவருக்கு. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ளே போய்விட்டார். திரும்பி வர நான்கு வருடங்கள் ஆகும். நாடு இருக்கிற ஸ்திரமற்ற சூழ்நிலையில், இதுதான் நாம் தேடிய நல்ல நேரம் என்று நினைத்திருக்கலாம்.

கடந்த சில தினங்களாக விஜய்யின் மூவ்களில் வித்தியாசம். சென்னை ஈசிஆரில் அமைந்துள்ள ஒரு ஸ்டூடியோவில் அட்லீ இயக்கும் படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த இரண்டு நாட்களாக விஜய் நற்பணி இயக்க மாவட்ட தலைவர்களை அவர் உணவு இடைவேளைகளில் சந்தித்து வருகிறார்.

ஏதாச்சும் நடக்கும்!

1 Comment
  1. PANDIYAN says

    USELESS FELLOW

Leave A Reply

Your email address will not be published.