தேடிப்போன அட்லீ! திருப்பி அனுப்பிய விஜய்!

எல்லாம் ஒரு எரிச்சல்தான்!

0

நிஜத்தில் நடிகராக வேண்டிய நபர்தான் அட்லீ. இல்லையென்றால் முன்னணி ஹீரோவுக்கு உண்டான அத்தனை அல்டாப்பும் வந்து சேர்ந்திருக்காதல்லவா? விஜய் ஹீரோவாக நடிக்கும் படம் என்றால், அவுட்டோர் ஷுட்டிங் எப்படி அமர்க்களமாக இருக்கும்? ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அடை போல் மொய்த்துக் கொள்வார்களே…

அந்த கூட்டத்தில் அட்ராக்ட் பிகரான விஜய்க்கு செக்யூரிடி போடாமல் தன்னை சுற்றி பத்து பவுன்சர்களை வைத்துக் கொள்கிற தைரியம் உலகத்தில் யாருக்கு வரும்? அட்லீயை தவிர! இந்த கொடுமையை எல்லாம் கண்ணாரக் கண்டு, காதார புகைந்த விஜய் நல்ல நேரம் வரட்டும். நறுக்கி விட்ருவோம் என்று நினைத்தார் போலிருக்கிறது. அந்த நல்ல நேரம் சில தினங்களுக்கு முன் வந்து சேர்ந்தது.

அழையா விருந்தாளியாக விஜய் வீட்டுக்குப் போனாராம் அட்லீ. சிலபல சம்பிரதாய சிரிப்புகளுக்குப் பின், அண்ணா… மறுபடியும் நான் உங்கக் கூடதான் படம் பண்ணுவேன். இல்லேன்னா சும்மாவே இருப்பேன் என்று பிட்டை போட, எங்கிட்டேயே பிலிம் இன்ஸ்ட்டியூட் கட்றீயா? என்று கடுப்பாகியிருக்கிறார் விஜய். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், வெரி ஸாரி பிரதர். எனக்கு தோணுச்சுன்னா சொல்லியணுப்புறேன் என்று அனுப்பி வைத்தாராம்.

தாறுமாறாக செலவைக் கூட்டி, ஒரு நிறுவனத்தையே முடக்கிப் போட்டவரை எப்படி மறுபடியும் பேட்டரி போட்டு ஓட வைக்க முடியும்? விஜய்யின் முடிவு வியப்புக்கு உரியது அல்ல!

Leave A Reply

Your email address will not be published.