ம்ஹும்… நான் வரல! வடசென்னை படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்! காரணம் என்ன சார்?

0

நகம் கூட நடிக்கணும். அதுதான்டா நடிப்பு என்று மேலே விழுந்து பிராண்டுகிற அளவுக்கு நடித்துத் தள்ளும் நடிகர்களுக்கு மத்தியில் விஜய் சேதுபதியின் நடிப்பு மில்லி மீட்டர் தாண்டாத மிலிட்டரி ரூல் நடிப்புதான்! எந்தப்படத்திலும் தன்னை குறை சொல்ல முடியாதளவுக்கு நடித்துவிடுவார். ஆனால், அவர் நடிக்கும் படங்கள்தான் கூடை கூடையாக குறை சொல்ல வைக்கும். போகட்டும்… அதில் தப்பிய சில படங்கள்தான் விஜய்சேதுபதியின் உயரத்தை இன்னும் இன்னும் என்று கூட்டிக் கொண்டே போகிறது!

அப்படியொரு டாப் கிளாஸ் படமாக விஜய் சேதுபதிக்கு அமையப் போகும் படம் என்று எல்லாராலும் நம்பப்பட்ட வடசென்னை படத்திலிருந்து அண்ணார் விலகி விட்டார் என்கின்றன லேட்டஸ்ட் தகவல்கள். தனுஷ் தயாரித்து நடித்து வரும் இப்படத்தை வெற்றி மாறன் இயக்குகிறார்… இயக்குகிறார்… இயக்கிக் கொண்டேயிருக்கிறார்…. கடந்த ஐந்தாறு வருடங்களாக. முதல் ஷெட்யூல் இப்பதான் முடிந்தது. இரண்டாவது ஷெட்யூலுக்கு நாள் குறிக்க எந்த பஞ்சாங்கமும் இல்லை என்கிற அளவுக்கு அந்தப்படத்தை தள்ளி தூரமாக வைத்துவிட்டார் தனுஷ்.

இந்த நிலையில்தான் இந்தப்படத்திற்காக நான்கு முறை தேதிகளை மாற்றி மாற்றி கொடுத்துவிட்டாராம் விஜய் சேதுபதி. இதோ அதோ என்று அவரது கால்ஷீட்டை முடிந்தவரை விரயம் செய்துவிட்டார்களாம். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன விஜய் சேதுபதி, நான் இந்த படத்தில் இல்ல. இல்லவே இல்ல என்று கூறிவிட்டார்.

டம்ளர் வச்ச இடத்துல ஒரு டபராவை வச்சுட்டா போச்சு என்று அலட்சிய நிலையில் இருக்கிறதாம் வடசென்னை டீம்!

Leave A Reply

Your email address will not be published.