தியேட்டர் ஸ்டிரைக் விவகாரம்! விஜய் குரல் கொடுக்காததற்கு காரணம் இதுதானாம்!

1

அஜீத் மாதிரியில்லை விஜய்! சமயங்களில் சூழ்நிலை பொருத்து பேசவாவது செய்வார். அதுமட்டுமல்ல… ஜெ.வின் மறைவுக்குப் பின் தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கு சுண்ணாம்பு பெயின்டெல்லாம் அடித்து மீண்டும் பொலிவு பெற வைக்கும் வேலைகளிலும் இறங்கிவிட்டார். திடீரென அது அரசியல் இயக்கமாக மாறக் கூடிய சூழ்நிலை கனிந்து கொண்டிருக்கிறது. (முந்திக்கொள்ளப் போவது ரஜினியா, விஜய்யா?) இந்த நேரத்தில் கூட அவர் தியேட்டர்கள் மீது சுமத்தப்படும் இரட்டை வரி குறித்து பேசாமலிருப்பாரா? அப்படி இருக்கிறார் என்றால் ஏன்? இந்த கேள்விகள் மளமளவென மனசில் எழுகிறதல்லவா?

விஜய்க்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் விசாரித்தால், “எங்க தலைவர் வேணும்னுதான் பேசாமலிருக்கிறார். ஏன் பேசணும்?” என்கிறார்கள் காட்டமாக. “என்னது…? ஏன் பேசணுமா? இது அவர் தொழில் செய்யுற ஏரியா. தியேட்டர்கள் இல்லேன்னா விஜய்யே இல்ல தெரியுமா?” என்று உசுப்பிவிட்டால், கணீரென பேச ஆரம்பிக்கிறார்கள்.

“தியேட்டர்கள் இல்லேன்னா விஜய் இல்லேங்கறது எங்களுக்கும் தெரியும். ஆனால் விஜய் படத்தை போட்டு கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் எங்கள் விஜய்க்கு என்ன செய்தார்கள்? நன்றாக ஓடிய படத்துக்கு கூட கள்ளக் கணக்கு காட்டி, பணத்தை திருப்பிக் கொடு என்று விஜய் வீட்டு வாசலில்தானே வந்து நின்றாங்க? இத்தனைக்கும் எம்.ஜி.முறையில் வெளியிட்ட படத்துக்கே நஷ்ட ஈடு கேட்டு அவர்கள் வந்து நின்றதும் விஜய் படத்தை வாங்க விடாமல் தடுத்து சதி செய்ததும் எங்களுக்கு இன்னும் மறக்கல”.

“ஒரு படமோ, இரண்டு படமோ இல்ல. பல படங்களுக்கு தேவையே இல்லாமல் நெருக்கடி கொடுத்து விஜய்யிடம் வழிப்பறி செய்தது போல செய்தார்களே. அது எங்களுக்கு மறந்து போகும்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு” என்று கொந்தளித்தார்கள்.

இவர்கள் சொல்வது உண்மை என்றால், விஜய் செய்ததுதான் சரி. நல்லா வச்சு செய்ங்க விஜய்!

1 Comment
  1. ராஜ்குமார் says

    ரஜினிக்கு ஒரு நிலை மற்றவர்களுக்கு ஒரு நிலை என நல்லா நடிக்கிறீங்க.

Leave A Reply

Your email address will not be published.