விஜய்க்கு எதிராக விஷால் போட்ட கணக்கு அவுட்?

0

‘கத்தி சண்டை’ திரைக்கு வந்துவிட்டது. படத்திற்கான வரவேற்பு முன்னே பின்னே இருந்தாலும், கலெக்ஷன் கெட்டி என்கிறார்கள் பாக்ஸ் ஆபிசில். அப்படத்தின் விறுவிறுப்பான கதையை விட பிரமாதமான இன்னொரு கதைதான் இப்போது கோடம்பாக்கத்தின் டாப்பிக்!

விஜய்யின் பைரவா எப்போது வருகிறதோ ‘கத்தி சண்டை’ படத்தை அப்போது வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாராம் விஷால். பொங்கலுக்கு ‘பைரவா’ வரும் என்பதை அறிந்தே அதற்கேற்ற மாதிரி கத்தியை தீட்டி வந்திருக்கிறார்கள். என்னே விந்தை? சிங்கம் 3 தள்ளிப் போனதால் அந்த தேதியில் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வர வேண்டிய நிர்பந்தம். வேறு வழியில்லாமல் வந்துவிட்டது கத்தி சண்டை. அட போப்பா… இந்த கதைதான் தெரியுமே? என்று நீங்கள் அலுத்துக் கொள்வது புரிகிறது.

அதற்குள்ளே இன்னொரு  கதை இருக்கிறது. அதை கேளுங்க மகா ஜனங்களே… முதலில் பொங்கலுக்கு பைரவாவுடன் மோதுவோம் என்று விஷால் சொன்ன போது பலத்த ஷாக்கான தயாரிப்பாளர், என்னது… விஜய் படத்தோட மோதுறதா? தியேட்டர் நினைச்ச மாதிரி கிடைக்காது. கலெக்ஷனும் நினைத்த மாதிரி அமையாதே என்றாராம். அங்குதான் விஷாலின் பேராட்ட குணம் முன்னே நின்று நம்பியார் சிரிப்பு சிரித்தது.

தைரியமா ரிலீஸ் பண்ணுங்க. எவ்ளோ நஷ்டம் வருதோ, அதை நானே என் கையில் இருந்து தர்றேன். இப்படி விஷால் சொன்னதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் திரையுலக பிரமுகர்கள் பலர். ஒருவேளை விஷாலுக்கு எதிரான கொள்கை பரப்பு வேலையாக கூட இருக்கலாம். ஆனால் விஷாலின் விஜய் வெறுப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால், இதுவும் நிஜமாக இருக்குமோ என்கிற டவுட் வருதே… என்ன செய்ய?

Leave A Reply

Your email address will not be published.