3 Comments
  1. ஆரோக்கியதாஸ் says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் வசூல் சாதனை மிஞ்ச ஒருத்தனும் பொறக்கவில்லை.
    ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே வசூல் சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தாண்டா.
    தவிர ஜோசப் விஜயின் இடத்தை, தளபதி சிவகார்த்திகேயன் பிடித்து விட்டார்.
    நீ ஜோசப் விஜயிடம் காசு வாங்கி கொண்டு வாந்தி எடுக்காதே .

  2. Sarathkumar says

    தன் கட்சியில் ஒரு கோடி பேர் இன்னும் சேரவில்லை அது பொய்யான தகவல் என்று உண்மையை போட்டு உடைத்த மனிதர், அரசியல் ஆதாயத்திற்காக யாருக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பாரா என்ன? பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கண்ட ஜல்லிக்கட்டு நாயகன் சிந்திக்க வேண்டும்!

    ’கடந்த ஆண்டு, அரசியலுக்கு வரப்போகிறேன் என்பதை ஒரு அறிகுறியாக ரஜினிகாந்த் சொன்ன உடனேயே என்று தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் அவருக்கு எதிராக கொடி பிடித்தார்கள். நிச்சயமாக வருகிறேன் என்று சொன்ன பிறகு ரஜினிகாந்தை பலவீனமாக்கி களத்திற்கு வரவிடாமலே செய்வதற்கான பணிகளை பின்புலத்தில் செய்து வருகிறார்கள்.

    கமல் ஹாசன் அவசர அவசரமாக அரசியலில் குதித்ததற்கு ஒரு பிரபல அரசியல் கட்சியின் மாஸ்டர் ப்ளான் என சொல்லப் படுகிறது. கமல் ஹாசன் அரசியலுக்கு முதலில் வந்து விட்டால், ரஜினிகாந்த் பின் வாங்கி விடுவார் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் ஆக்கிய பிரபல திரைப்பட இயக்குனர் மூலமாகவும் அவருடைய அரசியல் வருகையை தடுத்த நிறுத்த முயற்சிகள் நடந்ததாம்.

    அரசியல் கட்சிகளின் வியூகம், அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டரின் கூற்றுப் படி விட்டு விடலாம். ஆனால் சமூகப் போராளிகள் ரஜினிகாந்துக்கு எதிராக களத்தில் இறங்கி இருப்பது தான் கேள்விகளை எழுப்புகிறது!

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது புனிதப் போராட்டம், இயற்கைக்கு எதிரான எந்த திட்டமும் தேவையில்லை என்றெல்லாம் ரஜினிகாந்த் குரல் கொடுத்தார். ஸ்டெர்லைட் நிர்வாகம் அளித்த விளக்கத்தையும் முற்றிலும் நிராகரித்தார். சீமான் உட்பட ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த எந்த அரசியல்வாதியும் இவ்வளவு தீர்க்கமான கருத்துக்களை சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் அப்போது அரசியல்வாதிகளுடன் சமரசம் செய்து கொண்ட சமூகப் போராளிகள் ரஜினிகாந்தின் இந்த கருத்துகளுக்கு குறைந்தபட்ச வரவேற்பு கூட அளிக்க வில்லை.

    தூத்துக்குடி வன்முறையில் சமூகவிரோதிகள் புகுந்து பொது மக்களின் புனிதப் போராட்டத்தை சிதைத்து விட்டனர் என்ற ரஜினிகாந்தின் கருத்தை ‘போராட்டக்காரர்களை சமூக விரோதிகள்’ என்று கூறிவிட்டார் என திரித்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டது. பின்னர், அவருடைய கருத்துகள் உண்மை என்பதற்கு ஆதாரமாக திமுக செயல் தலைவரின் அறிக்கையும், தூத்துக்குடி போராட்ட மக்களின் வாக்குமூலமும் அமைந்தது. ஊடகங்களின் டிஆர்பி தந்திரம் ஊரறிந்தது தான். சமூகப் போராளிகளுக்கு ரஜினிகாந்த் மீது என்ன கோபம்?

    தற்போது எட்டு வழிச்சாலை விவகாரத்திலும் ரஜினிகாந்த் ஆதரவு என்று வெகு வேகமாக சமூகத் தளங்களில், சமூகப் போராளிகள் பரப்பி வருகிறார்கள். செய்தியாளர்களின் கேள்விக்கு ‘இத்தகைய திட்டங்கள் தமிழகத்திற்கு தேவை. பாதிக்கப்படுபவர்களுக்கு ஈடாக நிலமும் பணமும் கொடுக்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திட்டம் இருந்தால் நல்லது’ என்று சொல்லியிருந்தார்.

    ‘இத்தகைய திட்டங்கள்’ என்பதும் ‘இந்தத் திட்டம்’ என்பதும் தமிழில் ஒரே அர்த்தத்தைக் கொடுக்கிறதா என்ன? ஏற்கனவே இருக்கும் இரண்டு நெடுஞ்சாலைகளை விரிவு படுத்துங்கள் என்று 8 வழி சேலம் – சென்னை திட்டத்தை எதிர்ப்பவர்கள் சொல்லும் மாற்றுத் திட்டம் ஆகும். ரஜினிகாந்த் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் தான் வேணும் என்று சொன்னாரா என்ன?

    எதிர்ப்பாளர்கள் சொல்லும் மாற்று திட்டமாகவும் இருக்கலாமே! இவர்கள் முன் வைக்கும் மாற்றுத் திட்டத்தில் விவசாயிகள் நிலம் பாதிக்கப் படாதா? அவர்களுக்கு என்ன பதில்? இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மாற்று நிலம் தரவேண்டும் என ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார்.

    தமிழகத்தில் பிரச்சனைக்காக போராடுபவர்கள் மத்தியில் ‘எதிர்ப்பு’ என்பது தான் பிரதானமாக தெரிகிறது. மாற்று திட்டத்தை முன் வைப்பவர்களிடம், அதற்கான பொதுமக்கள் ஆதரவைத் திரட்டுவது எப்படி? தாங்கள் முன்வைக்கும் தீர்வுக்கு ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களின் ஆதரவு திரட்டுவது எப்படி? போன்ற சிந்தனைகள் தெரியவில்லை.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அந்த நேரத்தில் நிலவிய உணர்ச்சிமயமான சூழலிலும், மத்திய மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டவர் பிரபல சமூக ஆர்வலர் கார்த்திகேய சிவசேனாபதி. அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தியதால், பணம் வாங்கி விட்டார் என்றெல்லாம் கூட அவர் மீது அவதூறு சுமத்தினார்கள். ஆனாலும் அவருக்கு மாற்றுக் கருத்து கொண்ட ஆட்சியாளர்களிடம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கண்டார்.

    தமிழக, ஏன் இந்திய அரசியலுக்கே முன் மாதிரியான சம்பவம் அது. மேல் நாட்டு அரசியல் நாகரீகம் என்று கூட சொல்லலாம். ஆனால், அதே கார்த்திகேய சிவசேனாபதி தற்போது எட்டுவழிச் சாலை திட்டத்திற்காக ரஜினிகாந்துக்கு பகீரங்க கடிதம் எழுதியுள்ளார். ‘இத்தகைய திட்டங்கள் தேவை’ என்று சொன்ன ரஜினிகாந்தின் கருத்தை ‘அவசியமில்லாத முன்னேற்றம்’ என்று விமர்சனம் செய்துள்ளார்.

    மாற்றுக் கருத்து கொண்ட அரசுகளுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டவர், இந்த எட்டுவழிச் சாலைத் திட்டத்தின் பாதிப்புகளையும், முன் வைக்கும் மாற்று திட்டத்தின் நன்மைகளையும் பட்டியலிட்டு ஊடகங்கள் மூலமாகவோ, நேரடியாகவோ ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுக்கு தெரிவித்து ஆதரவு திரட்டலாமே!

    ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அரசுகள் பணிந்தது என்றால் ஒட்டு மொத்த தமிழக மக்களின் குரலாக ஒலித்தது என்பதால் தான். அத்தகைய ஒட்டு மொத்த ஆதரவு வேண்டுமென்றால் அனைவருடைய ஆதரவும் தேவை. வசை பாடுவதன் மூலம் ஒரு சாராரின் ஆதரவை தேவையில்லாமல் இழப்பது அறிவு சார்ந்த செயல் தானா?

    அனைத்து தரப்பினரின் ஆதரவு வேண்டுமென்றால் இணக்கமான அணுகுமுறை மட்டுமே பலன் தரும். ஆவேசமான வசை பாடும் போக்கு, இருக்கும் ஆதரவையும் இழக்கச் செய்யுமே அன்றி தீர்வை நோக்கி நகரச் செய்யாது.

    ‘ரஜினி மக்கள் மன்றத்தில் ஒரு கோடி பேர் இன்னும் சேரவில்லை அது பொய்யான தகவல்’ என்று உண்மையை போட்டு உடைத்த மனிதர், அரசியல் ஆதாயத்திற்காக யாருக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பாரா என்ன? பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கண்ட ஜல்லிக்கட்டு நாயகன் சிந்திக்க வேண்டும்!

  3. JOHN PETER says

    ரஜினி மலைடா. மலையோடு மடுவை ஒப்பிடும் மடையாண்டா நீ.
    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மக்கள் செல்வாக்கு உலகம் அறிந்த ஒன்று,.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்

Close