சூர்யாவுக்கு கொள்ளை சம்பளம்! விஜய் முடிவால் அதிர்ச்சி!
இப்போதெல்லாம் விஜய் படத்தில் பணியாற்றும் பெரிய மனுஷர்களுக்கு குறுக்கு வழி தெரிய ஆரம்பித்துவிட்டது. அவரது படங்களில் வொர்க் பண்ணுவதற்கு அழைப்பு வரும். அதற்கப்புறம் சம்பள பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகும். அப்போது அவர்கள் சொல்லும் வார்த்தைதான் சிறப்போ சிறப்பு. “எனக்கு என்ன சம்பளம் கொடுக்கலாம்னு விஜய் சார்ட்ட கேளுங்க. சார் என்ன நினைக்கிறாரோ, அது குறைச்சலாயிருந்தாலும் சரி. கூடுதலாயிருந்தாலும் சரி. நான் ஓ.கே” என்று கூறிவிடுகிறார்கள்.
அட்லீக்கு யானை சம்பளம் கிடைத்ததும் அப்படிதான். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஓட்டக உயரத்தில் சம்பளம் கிடைத்ததும் அப்படிதான். ‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நடித்தால் ஹீரோதான் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு, எந்த நேரத்தில் ஜீசஸ் வந்து புத்தி சொன்னாரோ? ‘இறைவி’ மாதிரி படங்களில் வருகிற அழுத்தமான வாய்ப்பையும் அக்சப்ட் பண்ணக் கற்றுக் கொண்டார். அதற்கப்புறம் வந்ததுதான் ‘மெர்சல்’ வாய்ப்பு.
இந்தப்படத்தில் விஜய்யின் பலத்த ரெகமென்டேஷன் காரணமாக கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த நன்றியை அவர் மறக்கவே முடியாது. ஏன்? ஏ.ஆர்.முருகதாசின் ஸ்பைடர் படத்திலும் இவர்தானே வில்லன்? அங்கும் இதே சம்பளமாம்!