ஜெ.மறைவு! பைரவா விஷயத்தில் விஜய் எடுத்த திடீர் முடிவு?

2

எல்லா எலும்பு முறிவுக்கும் ஒரே வைத்தியம் மாவு கட்டுதான்! விஜய்யின் ஒவ்வொரு படங்களுக்கும் மாவு கட்டுப் போட்டு வந்த மாபெரும் சக்தி ஒன்று இயற்கையோடு இயற்கையாக கலந்துவிட்டது. அவருக்கு இது பேரதிர்ச்சியை கொடுத்திருப்பதை நன்றாகவே கவனிக்க முடிகிறது. அம்மா ஜெ.வின் பூத உடல் அருகே நின்று விஜய் கண்ணீர் மல்க கும்பிட்டதில் சிறிதளவும் கலப்படம் இல்லை. அவர் வடித்த அந்த இரண்டு சொட்டு கண்ணீருக்கு, ‘ரூட் கிளியர்’ என்று வேண்டுமானால் ஊர் உலகம் அர்த்தம் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

ஆனால் போலித்தனமில்லாத அந்த இரங்கல் யாராலும் விமர்சனத்திற்குள்ளாகக் கூடாது என்பதை மிக மிக சைலன்ட்டாக நிரூபித்திருக்கிறார் அவர். எப்படி?

பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் படம் ‘பைரவா’. அதற்குமுன் மிக பிரமாண்டமாக ஒரு பாடல் வெளியீட்டு விழா நடத்திவிட வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தார்களாம். அம்மாவின் மறைவு செய்தி கேட்டு ராஜாஜி ஹாலுக்கு ஓடோடி வந்த விஜய், அன்று மாலையே எடுத்த முடிவுதான் இது.

“பைரவா பாடல் வெளியீட்டு விழாவுக்கான முன்னேற்பாடுகளை உடனே நிறுத்துங்க. ஆடியோ சிடிகள் கடைக்கு அனுப்பி வைச்சா போதும். பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதுவும் வேணாம்” என்றாராம்.

தான் ஆடாவிட்டாலும், தன் மனம் ஆடும் என்பது இதுதானோ?

 

2 Comments
  1. Unmai says

    Antha Payam Irukkattum Anilkunju

  2. Arivalagan says

    I hatred Selfish Vijay

Leave A Reply

Your email address will not be published.