சீயான் விக்ரம் செய்வது ரிஸ்க்கான தொழிலா?

ஆயா சுட்ட வடையை கூட ஆன்லைனில் விற்கிற காலம் இது. இனி ஜாதகம் பார்த்து, மண்டபம் பார்த்து, கெட்டி மேளம் கொட்டி, பெண்டாட்டியை கைப்பற்றுகிற வைபவங்கள் கூட மறைந்து ஆன் லைனில் ஆர்டர் செய்தால் மனைவி கிடைக்கலாம் என்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது காலம். இங்கே வளர்ச்சியோடு வளர்ச்சியாக தன்னையும் ஒப்புக் கொடுக்கிற மனநிலை வந்தால் மட்டும்தான் சந்தோஷம் கிட்டும் என்று நினைத்தாரோ என்னவோ?

நம்ம ஊரு சீயான் விக்ரமும், பிக் டீல் என்ற ஷாப்பிங் சேனலில் பங்குதாரர் ஆகிவிட்டார். பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார், பிரபல தொழிலதிபர் ராஜ்குந்தரா ஆகிய இருவருடனும் இணைந்துதான் இந்த பிக் டீல் ஷாப்பிங் சேனலை ரன் பண்ணப் போகிறார் விக்ரம். இதில் இருபத்திநாலு மணி நேரமும் நீங்கள் பொருட்களை ஆர்டர் செய்யலாம். கதவை தட்டி கையில் கொடுத்துவிட்டு போவார்கள். இந்த சேனலின் செயல்முறை விளக்க பத்திரிகையாளர் சந்திப்பு சத்யம் வளாகத்தில் நடந்தது.

‘நீங்களே ஆர்டர் செய்து ஒரு பொருளை வாங்க சொன்னால், இந்த சேனல் மூலமா என்ன பொருள் வாங்குவீர்கள்?’ என்று விக்ரமிடம் நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா கேட்க, ‘என் மனைவிக்கு நல்ல புடவை ஆர்டர் பண்ணுவேன்’ என்றார் அவர். இது சாதா டீ. பின்னாலேயே வந்தது பழுக்கப்பட்ட போடப்பட்ட சூடு கரண்டி.! யாரோ ஒரு நிருபர், ‘சார்… இப்ப மேகி நூடுல்சுக்கு பீகார்ல தடை விதிச்சிருக்காங்க. அந்த விளம்பரத்தில் நடிச்ச அமிதாப்பச்சனுக்கு கூட வக்கீல் நோட்டீஸ் போயிருக்கு. அப்படியிருக்கும் போது நீங்களும் உங்களை மாதிரி பிரபலமான நடிகர்களும் இதுபோன்ற சேனல்களில் தோன்றி பொருட்களை வாங்க சொல்றது ரிஸ்க்தானே?’ என்றார்.

கேள்விக்குள் இருக்கும் தீச்சட்டியை லாவகமாக கேட்ச் பண்ணிக் கொண்ட விக்ரம், எங்க பிக் டீல் நிறுவனத்தின் மூலம் நாங்கள் விற்கும் எல்லா பொருட்களும் தரமானவையானதாகதான் இருக்கும். பல முறை சோதிச்சுதான் நாங்க விற்கவே வருவோம் என்றார். நம்புறோம் வாத்யாரே….!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அப்புறம்…? க்ளுக்கென சிரித்தாள் வேலைக்காரி!

குனிந்து நிமிர்ந்து வாசலை பெருக்கினாள். வாசல் சுத்தமாச்சு.... அப்புறம்...? க்ளுக்கென சிரித்தாள் வேலைக்காரி! கல்யாண்ஜி சார்... உங்க கவிதையின் கடைசி வரியை ‘வைரஸ் அட்டாக்’ பண்ணியதற்கு காரணம்...

Close