சிக்கினார் விக்ரம்! சீரழிக்க தயாராகும் பாலா! மகனே… மனோகரா, தாங்குவீயா?

1

அல்மோஸ்ட் வறண்டு போய் விட்டார் பாலா. ‘கொழுத்த கடா இளைச்சுதுடா, கொம்பு மட்டும் வாழுதடா’ கதையாக தன் பழம்பெருமையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இயக்குனர் பாலா, இப்போதெல்லாம் விநியோகஸ்தர்களை அஞ்ச வைக்கும் பூச்சாண்டியானது வேதனையிலும் வேதனை. இந்த பொல்லாத நேரத்திலும் புடிச்சுக்கோ தலையை… என்று தானே வந்து மாட்டிக் கொண்டிருக்கிறது விக்ரம் அண் கோ.

தன் மகனை பெரிய நடிகராக்க வேண்டும் என்ற நினைப்பில் மணிரத்னம், ஷங்கரிடம் வாய்ப்பு கேட்டு நின்ற விக்ரம், கடைசியில் பாலாவிடம் மாட்டியிருக்கிறார். பொதுவாக ரீமேக் படங்களில் பெரிதும் நம்பிக்கையில்லாத பாலா, முதன் முறையாக ‘அர்ஜுன் ரெட்டி’ என்கிற வெற்றிப்படத்தை ரீமேக்க துணிந்தது எந்த நம்பிக்கையில் என்றே புரியவில்லை.

அப்படியே ஈயடிச்சான் காப்பியாக இப்படத்தை தமிழில் கொண்டு வந்துவிட முடியாது. ஆங்காங்கே சில மாற்றங்களையும் செய்தாக வேண்டும். அங்குதான் பிரச்சனையே. அப்படி செய்யப்படும் மாற்றங்கள் பாலாவின் முந்தைய பட ஸ்டைலில் இருந்தால் முடிந்தது முதல் பந்தி. பிரச்சனை அதுமட்டுமா? ஒரு நாளைக்கு ஒரே ஒரு ஷாட் எடுப்பது. ஷுட்டிங் எடுக்கிற விஷயத்தில் சிம்புவையே வெட்கப்பட வைப்பது என்று பஞ்சுவாலிடி பரந்தாமனாக இருக்கும் பாலா, இப்படத்தை எத்தனை வருஷத்திற்கு இழுக்கப் போகிறாரோ?

எனிவே… விக்ரமின் குருபக்திக்கு கோடி நமஸ்காரம் பண்ணியாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறான் அப்பாவி ரசிகன்.

1 Comment
  1. raj says

    What is your problem? Go to a good mental doctor.

Leave A Reply

Your email address will not be published.