அப்பா ஸ்தானத்தில் நானிருக்கேன்! ஒ.பி.எஸ்சால் விந்தியா ஆறுதல்!

0

அடிமட்ட தொண்டனுக்கும் அமைச்சர் பதவி தருகிற ஒரே கட்சி அதிமுகதான். டீக்கடை நடத்தியவர் முதல்வர் ஆவதெல்லாம் அதிமுக வின் ஜனநாயகத்திற்கு கிடைத்த ஆயுட்கால பெருமை. ஒருவகையில் இதுதான் தலைமையின் சர்வாதிகாரம் என்று உலகம் பழித்தாலும், பலன் பெற்றவர்களின் வாயால் கேட்டால் அதுதான் பஜகோவிந்தம்!

இன்னும் கொஞ்ச நாள் அம்மா ஜெ. இருந்திருந்தால், விந்தியாவை மந்திரியாக்கி கூட அழகு பார்த்திருப்பார். அந்தளவுக்கு கட்சிக்காக ஓடி ஓடி உழைத்தார் விந்தியா. அவர் போகிற இடத்திலெல்லாம் கூடுகிற கூட்டத்தையும், விந்தியாவின் விழுந்து பிராண்டுகிற பேச்சையும் உளவுத்துறை மூலமாக கேட்டு அழகு பார்த்தாராம் ஜெ. அப்படியொரு அந்தஸ்தில் இருந்த விந்தியாவுக்கு, அம்மாவின் மறைவு ஆறாத துயரம் என்றால், அதில் துளியும் பாசாங்கு இல்லைதான்.

“போதும்.. போதும்… அம்மான்னு சொன்ன வாயால இனி ஒருத்தரையும் அம்மான்னோ, சின்னம்மானோ சொல்லவே மாட்டேன். அரசியலை விட்டே விலகுகிறேன்” என்று கூறிவந்தார் அவர். இந்த விஷயம்தான் முதல்வர் ஓ.பி.எஸ் சின் காதுக்கு போனதாம். விந்தியாவை அழைத்தவர், “அம்மா போனாலென்ன? அப்பா ஸ்தானத்துல நான் இருக்கேன். கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒருபோதும் ஆபத்து வராது. நீ இங்கேயே இரும்மா” என்றாராம்.

பொதுக்குழு வரைக்கும் காத்திருப்பது. அங்கு விபரீத முடிவுகள் எடுக்கப்பட்டால், அரசியலை விட்டே ஒதுங்குவது என்ற முடிவில் இருக்கிறார் விந்தியா.

Leave A Reply

Your email address will not be published.